சென்னை:பிரபில இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நேரடி தெலுங்குப் படமாக வரும் ஜனவரி 10ஆம் தேதி சங்கராந்தி அன்று வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அன்ஜசாலி என நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீத்தில் அந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அரசியல் பின்னணியை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது எனலாம். மேலும் இந்த படம் இரண்டரை ஆண்டுகள் கழித்து வெளிவரும் ராம்சரண் படம் என்பதால் பெரும் எதிர்பார்பிற்கு உள்ளாகியுள்ளது.
இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற படத்தின் முன்வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "இப்போது இருக்கும் தலைமுறையினர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பத்து நிமிடங்களுக்குள் படத்தைப் பற்றி செல்போனில் வளைதளங்களில் பதிவிடுவது, மெசேஜ் செய்வது என கவனம் சிதறுபவர்களாக இருக்கிறார்கள்.
பத்து நிமிடங்களுக்கு மேல் அவர்களால் ஒரு படத்தை ஒன்றி பார்க்க முடிவதில்லை. ஆனால், கேம் சேஞ்ச்சர் அப்படி இல்லை. நீங்கள் எங்கும் தலையை திருப்பக்கூட முடியாது. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக படத்தை உருவாக்கியுள்ளோம்" என கூறியிருந்தார்.
இதுகுறித்து பிரபல பாலிவுட் இயக்குநரும், தமிழில் இமைக்கா நொடிகள் போன்ற படத்தில் நடித்த நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் இந்திய பதிப்பிற்கு கொடுத்த பேட்டியில் கூறும்போது, “ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குநர் இது போன்று பேசுவது வருத்தமளிக்கிறது. கேம் சேஞ்ச்சர் விழாவில் இப்போதிருக்கும் பார்வையாளர்களின் கவனிக்கும் திறன் மிகவும் குறைந்துவிட்டதாகவும், ரீல்ஸ்களை பார்ப்பதாகவும் அதற்கு ஏற்றவாறு படத்தை உருவாக்கியிருப்பதாகவும் கூறியிருப்பது, மிகவும் வருத்தமாக இருக்கிறது.