தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆண்கள் அணியால் கண் கலங்கிய தர்ஷா; ஆதரவாக பேசிய விஷால்... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - BIGG BOSS SEASON 8 TAMIL

Bigg Boss season 8 tamil: பிக்பாஸ் சீசன் 8இல் இன்று ஆண்கள் அணிக்காக சமைத்து கொடுத்த தர்ஷா, தர்ஷிகாவிடம் ஆண்கள் அணி குறித்து புகார் கூறி கண் கலங்குவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது

பிக்பாஸ் சீசன் 8 தமிழ்
பிக்பாஸ் சீசன் 8 தமிழ் (Credits - @vijaytelevision X account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 17, 2024, 3:34 PM IST

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தர்ஷா ஆண்கள் வீட்டில், பெண்கள் அணியின் கருப்பு ஆடாக விளையாடி வருகிறார். இந்த வாரம் ஆரம்பத்திலேயே தர்ஷிகா உள்ளிட்ட பெண்கள் அணியினர், தர்ஷாவிடம் "நீ ஏதாவது பிரச்சனைனா அழாத, உன்னோட பலவீனம் அவங்களுக்கு தெரியக் கூடாது" என சொல்லி அனுப்பினர். அதோடு மட்டுமில்லாமல் தர்ஷாவிடம் ஆண்கள் அணிக்கு தொல்லை கொடுக்கும் படி அட்வைஸ் செய்து அனுப்பினர்.

இதனையடுத்து ஆண்கள் அணிக்கு வந்த முதல் நாளிலிருந்து தர்ஷா தனது கேமை விளையாட தொடங்கினார். மளிகை சாமான் டாஸ்க்கில் ஆண்கள் அணி சொதப்பிய போது வேண்டுமென்றே பெண்கள் அணி முன் குரலை உயர்த்தி கேள்வி கேட்டு கைத்தட்டல்கள் பெற்றார். மேலும் ஆண்கள் அணியை ஒன்றாக கூடி ஆலோசனை செய்ய விடாமல் வீட்டின் குறுக்கே பூனை போல சுற்றி வந்தார்.

ஆனால் தர்ஷாவின் கேம் பிளானை ஆண்கள் அணியினர் ஓரளவு கணித்தனர். இதனால் தர்ஷாவை எந்த டாஸ்கிலும் ஈடுபடுத்தாமல் வீட்டில் வைத்திருந்தனர். அதற்கும் தர்ஷா ஆண்கள் அணியினரிடம் கேள்வி கேட்க, “நீங்கள் என்ன இருந்தாலும் பெண்கள் அணியிலிருந்து வந்தவங்க, உடனே டாஸ்கில் விளையாட விட மாட்டோம்” என தெரிவித்தனர். அப்படியா நான் என் கேமை ஆடுகிறேன் என தர்ஷா, ஆர்னவை ஆண்கள் அணிக்கு எதிராக திருப்பி விட்டார்.

இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோவில், தர்ஷா தேம்பி தேம்பி அழுகிறார். ”நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு, ஆண்கள் அணியில் வயிறு பிரச்சனை வந்ததா சொல்றாங்க” என தர்ஷிகாவிடம் புகார் கூறுகிறார். இதனைத்தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தான் இருக்கிறது பெரும் ட்விஸ்ட்.

இதையும் படிங்க: ரஜினி பட நடிகை கர்ப்பம்... திரைப்பட விழாவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகை!

விஷால், தர்ஷாவிடம் ”நாங்க உன்ன கலாய்க்கிறோம்னா என்ன அர்த்தம், நீங்க எங்க அணியில ஒரு நபர்னு அர்த்தம்” என கூறுகிறார். மேலும் ”நீ அழும் போது பெண்கள் அணியில் எல்லாரும் சிரிச்சிட்டு இருந்தாங்க, நீ நாளைக்கு பெண்கள் அணிக்கு போனாலும் தனியா தான் கேம் ஆடணும்” என கூறுகிறார். உண்மையாகவே விஷால் தர்ஷாவுக்காக பேசுகிறாரா அல்லது ஆண்கள் அணியின் கேம் பிளானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details