சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி 4 நாட்கள் ஆன நிலையில், தற்போது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் ஆரம்ப நாளிலேயே வீட்டை ஆண்கள், பெண்கள் என பிரித்தார். அதன் காரணமாக வீட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் போனது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை நிருபிக்கவும், இந்த வார எலிமினேஷனில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் பல்வேறு விதமாக கண்டெண்ட் வழங்கி வருகின்றனர்.
பெண்கள் அணியில் இருக்கும் முத்துக்குமரன் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்க முந்திக் கொள்வதாக அந்த அணியில் உள்ளவர்களே தலைவரிடம் புகார் கூறுகின்றனர். ரஞ்சித் மற்றும் ரவீந்தர் ஆகியோர் பேசி வைத்து சண்டை போட்டு கொண்டது, சுவாரஸ்யத்திற்கா அல்லது நாமினேஷனில் இருந்து தப்பிக்கவா என மற்ற போட்டியாளர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில், ரஞ்சித் எதுவும் பேசாமல் ஏதோ ஒரு கேம் பிளான் வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் என மற்ற போட்டியாளர்கள் வரிசையாக நாமினேட் செய்துள்ளனர். ரஞ்சித்தும் "ஆமா நான் தான் வீட்டை விட்டு வெளியே போவேன்" என தன்னையே நாமினேட் செய்து கொண்டார். மற்றொரு புறம் சவுந்தர்யா பிக்பாஸ் வீட்டில் சவுந்தர்யாவின் செயல்கள் எந்தவித சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தவில்லை என அவரையும் நாமினேட் செய்துள்ளனர்.
மேலும் ஜெஃப்ரி, முத்துவின் மீது இருக்கும் வன்மம் குறையாமல் அவரை நாமினேட் செய்தார். ஒது ஒருபுறம் இருக்க ஆண்கள், பெண்கள் அணி இடையே கிச்சன் பிரச்சனை தலைவலியாக அமைந்தது. தர்ஷா குப்தா 'எங்களோட நூடுல்ஸ் காணோம்' என விஷாலை வம்பிழுக்க, பின்னர் அது பெண்களின் மளிகை பொருட்கள் லிஸ்டிலேயே இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்ப வேண்டும் என முடிவு செய்த பிக்பாஸ், பெற்றோர்களில் சிறந்தவர் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் விவாதம் வைத்தார்.