தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிக்பாஸ் நாமினேஷன் ஃப்ரி பாஸ் வென்ற பெண்கள் அணி... மக்களிடம் பாராட்டை பெற்ற முத்துக்குமரன்! - BIGG BOSS 8 TAMIL

Bigg Boss 8 Tamil: பிக்பாஸ் வீட்டில் நேற்று திறமை நிரூபிக்கும் போட்டியில் முத்துக்குமரன், ஆனந்தி ஆகியோர் அசத்திய நிலையில், நாமினேஷன் ஃப்ரி பாஸை பெண்கள் அணியினர் வென்றனர்.

பிக்பாஸ் சீசன் 8 தமிழ்
பிக்பாஸ் சீசன் 8 தமிழ் (Credits - @vijaytelevision X account, MuthuKumaran jegatheesan Instagram account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 18, 2024, 10:46 AM IST

Updated : Oct 18, 2024, 11:01 AM IST

சென்னை: ரெட் அலர்டால் மழை வராமல் மந்தமாக இருக்கும் சூழல் போல, பிக்பாஸ் அதற்கு மேல் உப்பு சப்பு இல்லாமல் செல்கிறது. நேற்று காலை பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அருண் பிரசாத் ஆர்னவிடம் மன்னிப்பு கேட்க, அன்ஷிதா, முத்துக்குமரன் இடையே இரு வீட்டிற்கும் நடுவே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து கன்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர்களுக்கே பொழுதுபோகாமல் talent show நடத்தினர். இதில் ரஞ்சித், ஜாக்குலின் ஆகியோரது நடிப்பு ரசிக்கும்படியாக அமைந்தது. அதேபோல் முத்துக்குமரன், ஆனந்தி நடத்திய நாடகத்தில் இருவரும் நடிப்பில் அசத்தினர். முத்துக்குமரன் ஒரே நேரத்தில் நீண்ட வசனம் பேசி நடித்தது பாராட்டை பெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து நாமினேஷன் ஃப்ரி பாஸிற்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் வெற்றி பெறும் அணியினர் தங்கள் அணியில் ஒருவருக்கு நாமினேஷன் ஃப்ரி பாஸ் கொடுத்து காபாற்றலாம். இந்நிலையில் அறிவில் சிறந்தது யார் என்ற போட்டியில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பெண்கள் அணி வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து டவர் பில்டிங் டாஸ்கில் ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். இதில் சுனிதா, ஜெஃப்ரி நன்றாக விளையாடினர்.

இதனைத்தொடர்ந்து இரவு தர்ஷா, தர்ஷிகாவிடம் ஆண்கள் அணி குறித்து புகார் கூறத் தொடங்கினார். தான் செய்த சமையலை சாப்பிட்டு ஆண்கள் அணியினர் வயிற்று பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தார். இது ஒரு புறம் இருக்க ஜாக்குலினிடம் ஆண்கள் அணியினர் தர்ஷாவின் சமையலை பற்றி கிண்டலடித்து கொண்டிருந்தனர். அதற்கும் ஜாக்குலின், ”நாங்க முதல் வாரமே தர்ஷாவை ஆண்கள் அணிக்கு அனுப்பியிருந்தால், நீங்க அவ்வளவு தான்” என சிரித்துக் கொண்டிருந்தார்.

தர்ஷாவின் சமையலால் வீடு அவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆண்கள் அணியின் விஷால், தர்ஷாவை மூளைச் சலவை செய்யத் தொடங்கினார். பெண்கள் அணியில் உன்னை எவரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், பெண்கள் அணிக்கு சென்றாலும் இந்த வீட்டில் தனியாக தான் கேம் ஆட வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க:கணவருடன் புது வீட்டில் குடியேறிய நடிகை ஹன்சிகா... புகைப்படங்கள் வைரல்!

இதனைத்டொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில், பெண்கள் அணி நாமினேஷன் ஃப்ரி டாஸ்க்கில் ஆண்கள் அணியை விட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி பெறுகிறது. இந்த சீசன் ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களில் ஆண்கள் அணியின் கை சற்று ஓங்கியிருந்த நிலையில், தற்போது பெண்கள் அணி நன்றாக விளையாடி வருகிறது. ஆண்கள் அணியும் விழித்துக் கொண்டு நன்றாக விளையாடினால் மட்டுமே காரசாரத்துடன் இந்த சீசன் செல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 18, 2024, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details