தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நான் சொம்பு தூக்கியா?... அன்ஷிதாவை காயப்படுத்திய ஆர்னவ்... கொளுத்திப் போட்ட பிக்பாஸ்! - BIGG BOSS 8 TAMIL

BIGG BOSS 8 TAMIL: பிக்பாஸ் விருதுகள், ஆர்னவ், அன்ஷிதா சண்டை, என பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பிக் காணலாம்

பிக்பாஸ் ஆர்னவ், அன்ஷிதா
பிக்பாஸ் ஆர்னவ், அன்ஷிதா (Credits - arnaavactor Instagram Account, anshithaanji_official Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 19, 2024, 1:10 PM IST

சென்னை: உடலை சோம்பேறித்தனமாக்கும் காலநிலை, பெரிய அளவில் கன்டென்ட் இல்லாமல் வறட்சியாக இருக்கும் பிக்பாஸ் வீடு, இதற்கிடையில் ’போட்டுத் தாக்கு’ பாடலுடன் நாளை தொடங்கினர் போட்டியாளர்கள். அனைவருக்கும் பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடந்து கொண்டதற்கு ஏற்றார் போல பிக்பாஸ் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் அணியினர் தர்ஷாவிற்கு ’டிராமா குயின்’ விருது வழங்கினர். இதனைத்தொடர்ந்து சொம்பு தூக்கி விருதை ஆர்னவ், அன்ஷிதாவிற்கு வழங்கினார்.

அவ்வளவு தான், அழத் தொடங்கினார் அன்ஷிதா. "இந்த வீட்டில் யார் எனக்கு இந்த விருது கொடுத்திருந்தாலும் கவலை பட மாட்டேன், ஆனால் என்னை நன்றாக தெரிந்தவர் கையிலிருந்து இந்த விருது கிடைச்சிருக்கு" என கச்சேரி ஆரம்பித்தது. அவருக்கு ஆதரவாக சுனிதாவும், ஆர்னவுக்கு எதிராக கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சனை ஒரு புறம் நடக்க, வீட்டின் வராண்டாவில் ஜாக்குலின் மற்றும் ஆண்கள் அணியினர், "இந்த பிரச்சனையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், நீ பாயாசத்த ஊத்து" என வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

ஆர்னவ், அன்ஷிதாவிடம் இது பிக்பாஸ் கேமுக்காக ஆண்கள் அணியில் ஒன்றாக பேசி முடிவு எடுத்தது என சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் மறுபக்கம் சுனிதா ’எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல்’ அவ்வப் போது பற்ற வைத்து கொண்டே இருந்தார். எது எப்படியோ பிக்பாஸின் நோக்கம் நடந்தது. ஆர்னவ், அன்ஷிதா இடையே வரும் நாட்களில் பெரிய சண்டை நடக்கும்.

இதனைத்தொடர்ந்து மெமரி டாஸ்க் நடைபெற்றது. இதில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். முத்துக்குமரன் அபார நியாபக சக்தியால் ஆண்கள் அணியினர் வெற்றியை சிறு புள்ளிகள் வித்தியாசத்தில் தவறவிட்டனர். இதனைத்தொடர்ந்து பெண்கள் அணியில் கலந்து பேசி, ஒரு மனதாக ஜாக்குலினுக்கு நாமினேஷன் ஃப்ரி பாஸ் வழங்கினர்.

இதையும் படிங்க:ரஜினி, கமல் நட்பு... தல அஜித் சொன்ன வார்த்தைகள், தளபதியின் பரிசு... தூள் கிளப்பிய சிவகார்த்திகேயன்!

பின்னர் இந்த வாரம் நன்றாக விளையாடிய போட்டியாளர்? மற்றும் மோசமாக விளையாடிய போட்டியாளரை தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறினார். நல்ல போட்டியாளர்களாக ரஞ்சித், தர்ஷிகா மற்றும் மோசமான போட்டியாளர்களாக ஆர்னவ், சாச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டனர். மோசமான போட்டியாளர்களை கயிற்றால் கட்டி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார் பிக்பாஸ். சில நாட்கள் சுவாரஸ்யமாகவும், சில நாட்கள் உப்பு சப்பென்று போய்க் கொண்டிருக்கும் இந்த சீசனில், வீட்டில் உள்ள தேவை இல்லாத ஆணிகளை விஜய் சேதுபதி நீக்குவாரா என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details