சென்னை: ’குட் பேட் அக்லி’ (good bad ugly) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தற்போது அஜித் நடித்துள்ளார். 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் அஜித்தின் பல கெட்டப்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் குட் பேட் அக்லி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.