தமிழ்நாடு

tamil nadu

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலா! - Chennais Amrita brand ambassador

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 4:51 PM IST

Chennais Amrita brand ambassador: சென்னைஸ் அமிர்தாவின் குழும தலைவர் பூமிநாதன், தங்கள் குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவை நியமித்தார்.

பிராண்ட் அம்பாசிடரான நடிகை ஸ்ரீலீலா
பிராண்ட் அம்பாசிடரான நடிகை ஸ்ரீலீலா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை தலைவர் பூமிநாதன் மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டனர். மேலும் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்கான பிரத்யேக இணையதளத்தையும் தொடங்கி வைத்த நடிகை ஶ்ரீலீலா, அத்துடன் ஏவியேஷன் படிப்பில் இணைந்த முதல் 10 மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் அவரது திரையுலக வெற்றி தொடர்பான ஏ.வி. ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய ஶ்ரீலீலா, மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கும், மேம்பாடு அடைந்துவரும் கேட்டரிங் துறையில், மாணவர்களின் வெற்றிக்கு தயார்படுத்தும் சென்னைஸ் அமிர்தாவின் செயல்பாடுகளையும், சென்னைஸ் அமிர்தாவின் நவீன கல்வித் தரம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகரான உள்கட்டமைப்புகள் குறித்தும் பேசினார்.

சென்னைஸ் அமிர்தா, சர்வதேச அளவில் சுமார் 25,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதல் நிறுவனம் என்பதையும், மாணவர்களுக்கு படிக்கும்போதே பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்கும் ‘ஏர்ன் வைல் லேர்ன்’ முன்முயற்சி குறித்தும் ஶ்ரீலீலா தனது உரையில் கூறினார்.

2010ஆம் ஆண்டு முதல் ஹோட்டல் மேலாண்மைக் கல்வியில் முன்னணியில் இருக்கும் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்கள், பெங்களூரு, விஜயவாடா மற்றும் ஹைதராபாத் வரை தனது கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்தி, தென்னிந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனமாக திகழ்கிறது. நடப்பு கல்வியாண்டில், மலேசியாவின் ஏவியேஷன் பல்கலைக்கழகத்துடன் (UniCAM) செய்த ஒப்பந்தம் மூலம் விமானத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

இதற்கென சென்னை ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையம் அருகே, புதிய கல்வி வளாகத்தை குழும தலைவர் பூமிநாதன் திறந்து வைத்தார். இந்த வளாகம் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், நவீன உட்கட்டமைப்புடன் அமைந்துள்ளது. சென்னை, சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கேட்டரிங் துறையின் சர்வதேச கற்றல் திட்டத்தை, பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விமானப் படிப்புகளுடன் விரிவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சர்வதேச அளவில் கேட்டரிங் கல்வியில் முன்னிலை வகிக்கும் சென்னைஸ் அமிர்தா, ஜெர்மனியின் ஸ்கார்ட்டில் நடந்த ஐகேஏ/சமையல் ஒலிம்பிக்கில் மூன்று தங்கம் உட்பட பத்து பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. 124 ஆண்டுகால வரலாற்றில் ஐகேஏ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதன்முதலில் தங்கம் பெற்றுத் தந்துள்ளது. ஷார்ஜாவில் நடந்த 27வது எக்ஸ்போ கலினயேர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் பெற்று சென்னைஸ் அமிர்தா சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க:அவர் பாதையில்.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்! - Vidaamuyarchi Fist Look

ABOUT THE AUTHOR

...view details