தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"உங்கள் கணவர் சினிமாத் துறையை சேர்ந்தவரா?" - ராஷ்மிகா சொன்ன நச் பதில்! - PUSHPA 2 WILD FIRE EVENT

உங்களது மாப்பிள்ளை சினிமாத்துறையை சேர்ந்தவரா? இல்லை வேறு துறையை சேர்ந்தவரா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, பதிலளித்த ராஷ்மிகா மந்தனா இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றார்.

புஷ்பா 2 போஸ்டர், ராஷ்மிகா மந்தனா
புஷ்பா 2 போஸ்டர், ராஷ்மிகா மந்தனா (Credits - Mythri Movie Makers X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 11:06 PM IST

சென்னை :தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2. இயக்குநர் சுகுமார் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிச 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த நவ 17ம் தேதி வெளியானது. புஷ்பா முதல் பாகத்தில் 'புஷ்பான்னா.. ஃபயர்' என்ற டயலாக் டிரெண்டான நிலையில், இந்தச் ட்ரெய்லரில் 'புஷ்பான்னா வைல்டு ஃபயர்' என்ற டயலாக் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க :'குட் பேட் அக்லி' ரிலீஸ் எப்போது? - 'புஷ்பா 2' நிகழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்!

இந்த டயலாக்கை அடிப்படையாக வைத்து பட ப்ரோமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று( நவ 24) Pushpa 2 Wild Fire Event நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, தயாரிப்பாளர் தானு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் நவீன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சிஇஓ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா மேடையில் பேசும் போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களது மாப்பிள்ளை சினிமாத் துறையை சேர்ந்தவரா? இல்லை வேறு துறையை சேர்ந்தவரா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என பதிலளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details