சென்னை :தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவரது நடிப்பில் இந்தாண்டு தீபாவளிக்கு பிரதர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் இவர் ஆடிய கோல்டன் ஸ்பேரோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்து வரும் ஓஜி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் செல்ஃபி கேட்ட ரசிகர் ஒருவரை திட்டிய பிரியங்கா மோகனின் வீடியோ வைரலானது. இந்நிலையில் தெலங்கானாவில் ஷாப்பிங் மால் ஒன்றின் திறப்பு நிகழ்வில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்டார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதையும் படிங்க :ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி திருவொற்றியூர் கோயிலில் மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!