சென்னை: லைகா புரொடக்சன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
லால் சலாம் படத்தின் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், தம்பி ராமையா, செந்தில், தங்கதுரை, திவாகர், நடிகை நிரோஷா, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், "முக்கியமான படம் லால் சலாம். 1990 காலத்தில் நடக்கும் கதை. நிறைய உண்மையான விஷயங்களையும் கிரிக்கெட் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். லால் சலாம் உலக சினிமா அளவுக்குச் சென்று சேரும் எனவும், நான் எந்த படம் நடித்தாலும் ரெட் ஜெயன்ட் தான் ரிலீஸ் பண்றாங்க. எனக்கு சினிமாவில் 15 வருடம் ஆகி விட்டது. அதில் முக்கியமாக இருந்தவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின்.
சூப்பர் ஸ்டாரை எத்தனையோ ஸ்கிரீனிங்கில் பார்த்து கை தட்டி, விசில் அடித்து இருக்கிறோம். அதை நேரில் பார்க்கும் போது, ப்பா என்ன இப்படி இருக்காரே என்று, பாம்பேயில் நடந்த ரஜினி சாரின் முதல் ஷாட்டை பார்த்து நானும் விக்ராந்த்தும் வியந்தோம்.