தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: கேரளா பாணியில் தமிழ் சினிமாவிலும் கமிட்டி - நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு - Vishal on harassments in Film - VISHAL ON HARASSMENTS IN FILM

Actor Vishal: நடிகைகளை யாராவது அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் எனக்கூறிய நடிகர் விஷால், ஹேமா கமிட்டி போல் தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால்
விஷால் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 29, 2024, 12:03 PM IST

சென்னை:நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு காலை உணவினை வழங்கி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த விஷால், “என் பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்திற்கு வந்து தான் தொடங்குவேன். இவர்களை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம். அவர்களுடைய ஆசிர்வாதம் மிகப்பெரிய பாக்கியம்.

நான் உணவு வழங்கவில்லை என்றாலும் அவர்கள் என்னை வாழ்த்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் மனதார வாழ்த்தினார்கள். தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவரவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாளர்கள் வைத்துள்ளார்கள். நடிகைகளுக்கு 20 சதவீதம் தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள்?, அவர்கள் சொல்வது உண்மையா?, திரைப்படம் எடுக்கிறவர்களா? என்பது குறித்து சுதாரிப்பு கொள்ள வேண்டும். ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும், தமிழ் திரைப்பட உலகில் ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அமைக்கப்படும்.

யாரோ ஒருவர் பைத்தியக்காரத்தனமாக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு விஷயம் என்ன என்றால் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அப்படி கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைத்தால் தண்டனை கிடைத்தாக வேண்டும். தமிழ் சினிமாவிலும் காலங்காலமாக குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் உள்ளது. இங்கும் அது போல் பிரச்சினைகள் இருக்கலாம்.

உப்புமா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. தமிழ் திரையுலகில் இப்படி இருப்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் குறித்த கேள்விக்கு, “ஸ்ட்ரைக் செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? எதற்கு ஸ்ட்ரைக் ?, அதனால் என்ன பயன். பணம் இருக்கிறவர்கள் படம் எடுப்பார்கள். எல்லா தயாரிப்பாளர்களும் விமானம் பிடித்து மும்பைக்கு சென்று அமேசான், நெட்பிலிப்ஸ் நிறுவனத்திடம் பேசி முடிவெடுங்கள்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தங்கலான் பட வெற்றி விருந்து விழா; படக்குழுவினருக்கு உணவு பரிமாறி அசத்திய விக்ரம்! - Thangalaan success meet

ABOUT THE AUTHOR

...view details