சென்னை: வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் டிராகன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, "Oh my kadavule படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அந்த படத்தில் என்ன சமூக பொறுப்புணர்வோடு எடுகபட்டதோ அதே போல இந்த இந்த திரைப்படமும் இருக்கும். 10 சதவீதம் தான் டிரைலரில் இருக்கிறது. படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும். பிரதீப் ரங்கநாதன் என்ற நண்பனை நான் இயக்கவில்லை. உண்மையான நடிகராக நான் அவரை இயக்கியுள்ளேன்" என்று பேசினார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், "Love today படத்திற்கு பின்னர் எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதைக்கும், அன்பிற்கும் நன்றி. நாங்கள் நட்பையும் வேலையையும் தனிதனியகதான் பார்க்கிறோம்" என்றார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரியாளர் சந்திப்பில் டிராகன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
முதலில் டிராகன் படத்தின் தலைப்பிற்கு காரணம் குறித்து கேட்டபோது, "கல்லூரியில் முக்கியமான கெத்தாக சுற்றும் நபராக ஒருவர் இருப்பார், ஆனால் அவர் கல்லூரி முடித்த பின் அந்த மதிப்பு இருக்காது. அப்படிபட்ட ஒருவர் வாழ்கையில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதுதான் டிராகன். டிராகன் படத்தின் பெயர் ஏன் என்று படத்தில் ஆரம்பத்தில் 5 நிமிடங்களில் இருக்கும்.
இந்த படம் முழுக்க முழுக்க வெற்றியை முக்கியமாக வைத்து பொழுதுபோக்காக எடுக்கப்பட்டது. சிம்பு பாடல் பாடுவதற்கு இயக்குநர்தான் யோசனை கூறினார். என்னுடைய ஓட்டுநரிடம் பாடல் வரிகள் குறித்து பேசிய போது 'என்டி விட்டு போன' என்ற எளிதான வார்த்தையை வைத்து பாடல் வரிகள் தோன்றியது. கெளதம் மேனன் என் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார். அவர் ஆடும் போது முதல் டேக் இல் அனைவரும் கை தட்டினார்கள். இது அனைவராலும் கொண்டாடப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
பின்னர் பேசிய டிராகன் படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், “இங்கு யாருக்கும் போட்டி இல்லை. பிப்ரவரி 14ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அஜித் சாரின் விடாமுயற்சி படம் வெளியானதால் டிராகன் ரிலீஸ் தள்ளிப் போனது.21ஆம் தேதி தனுஷ் சார் இயக்கியுள்ள படம் வெளியாவது தற்செயலாக நடந்தது.
தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதன் பின்னர் என்ன செய்ய நினைக்கிறேனோ அதை செய்வேன். நான் இயக்கி நடிக்கும் போது ஒரு ஐடியாவில் நடித்தேன். ஆனால் மற்ற இயக்குநர்களின் படத்தில் நடிக்கும் போது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: காதலர் தினத்தன்று வெளியாகும் 'VD12' டீசர்… விஜய் தேவரகொண்டாவுக்கு டப்பிங் பேசிய சூர்யா! - VD12 TAMIL TEASER
‘டிராகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சி குறித்து கேட்டதற்கு, "கோமாளி படத்தில் முத்தக்காட்சி முக்கியமானது. ஆனால் ஜெயம் ரவி வேண்டாம் என்று கூறிவிட்டார். அதே போல இந்த படத்திற்கு கட்டாயம் தேவைப்படுகிறது என்பதால் அந்த காட்சி வைக்கப்பட்டது. நான் ஆரம்பத்தில் என்னுடைய நண்பன் தானே நம் இஷ்டம் போல நடிப்போம் என்று வந்தேன். ஆனால் அஷ்வத் மாரிமுத்து அதை செய்யவிடவில்லை. படப்பிடிப்பில் நண்பனாக இல்லாமல் இயக்குநராக கண்டிப்பாக இருந்தார்" என்றார்.