ETV Bharat / entertainment

காதலர் தினத்தன்று வெளியாகும் 'VD12' டீசர்… விஜய் தேவரகொண்டாவுக்கு டப்பிங் பேசிய சூர்யா! - VD12 TAMIL TEASER

VD12 movie tamil teaser: கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'VD12' படத்தின் டீசருக்கு நடிகர் சூர்யா டப்பிங் பேசியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவுக்கு டப்பிங் பேசிய சூர்யா
விஜய் தேவரகொண்டாவுக்கு டப்பிங் பேசிய சூர்யா (Credits - Instagram/Vijay Deverakonda, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 11, 2025, 10:08 AM IST

சென்னை: விஜய் தேவர்கொண்டாவின் அடுத்த படத்தின் தமிழ் டீசருக்கு சூர்யா டப்பிங் பேசியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள திரைப்படம் 'VD12' என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவில் 'Pelli choopulu' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிகுமகமானார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதில் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்தார்.

பின்னர் ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் 'கீதா கோவிந்தம்'. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இருவரது கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா சாக்லேட் பாயாக வலம் வரத் தொடங்கினார். இதனையடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா', 'டியர் கொம்ராட்', 'லிகர்', 'குஷி', 'ஃபேமிலி ஸ்டார்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனிடையே 'கல்கி 2898AD' படத்தில் அர்ஜுனா கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையிலும், தென்னிந்திய அளவில் விஜய் தேவரகொண்டா படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கௌதம் தின்னனுரி இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கௌதம் தின்னனுரி நானி நடிப்பில் வெளியான ’ஜெர்ஸி’ படத்தை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க: காலேஜையே கதற விடும் பிரதீப் ரங்கநாதன்... 'டிராகன்' டிரெய்லர் வெளியீடு - DRAGON MOVIE TRAILER RELEASED

இந்நிலையில் VD12 படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. VD12 டீசருக்கு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் டப்பிங் பேசியுள்ள நிலையில், தமிழில் சூர்யா டப்பிங் பேசியுள்ளார். இதனை சித்தாரா தயாரிப்பு தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் ஹிந்தியில் ரன்பீர் கப்பூர் டப்பிங் பேசியுள்ளார். பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ’VD12’ திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.