சென்னை: மடோன் அஸ்வின், நடிகர் விக்ரம் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இன்று(டிச.13) அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.