சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, வைபவ், மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சித்தார்த்த நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவில் விஜய் படப்பிடிப்பு குழுவினருடன் ஜாலியாக விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக, சமீபத்தில் கேரளாவுக்குச் சென்ற விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர்.
முன்னதாக, நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த கட்சியானது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனவும், தான் ஒப்புக் கொண்டுள்ள படங்களில் நடித்து விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் விஜய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னை டூ திருநெல்வேலிக்கு கோடை விடுமுறை கால சிறப்பு ரயில் சேவை! - Southern Railway