சென்னை: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர் மற்றும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.