திருவாரூர்:தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த கிராமத்தில் இளைய மகனுக்கு காதணி விழாவை எளிமையாக நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அவர் மெரினா திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகி 13 ஆண்டுகளாகிவிட்டது. பல வெற்றிப் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இடத்திற்கு வந்துவிட்ட சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி டீசர் கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள திருவீழிமிழலையில் அவருடைய குலதெய்வ கோவிலான மகா மாரியம்மன் திருக்கோவிலில் தன்னுடைய மூன்றாவது குழந்தையான ஆண் குழந்தைக்கு அவருடைய உறவினர்கள் முன்னிலையிலும் அவருடைய கிராமத்தார் முன்னிலையிலும் காதணி விழா நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க:ஆஸ்கர் இறுதிப்பட்டியலிலுள்ள ’அனுஜா’ குறும்படம் ஓடிடியில் வெளியீடு...!
அதன் பிறகு அவருடைய சொந்த கிராமத்தில் உள்ள கிராமத்தார் மற்றும் உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து அனைவரையும் மகிழ்வித்தார் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.