தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நான் சினிமாவிற்கு வந்ததே இதற்குத்தான்..! 'வடக்குப்பட்டி ராமசாமி' பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சந்தானம்

vadakkupatti ramasamy movie: இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் "வடக்குப்பட்டி ராமசாமி" படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படம் குறித்து சந்தானம் வெளியிட்ட வீடியோவால் கிளம்பிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்து பேசினார்.

Vadakkupatti Ramasamy
வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சந்தானம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 1:55 PM IST

சென்னை:இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் "வடக்குப்பட்டி ராமசாமி". இந்த படத்தை பீப்புல் மீடியா ஃபேக்டரி - விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜன.27) சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், ஆர்யா, அஸ்வின், ரவி மரியா, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், சேஷூ, இயக்குநர்கள் மடோன் அஸ்வின், ஸ்ரீ கணேஷ், பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சந்தானம், "சந்தானம் - ஆர்யா கூட்டணியில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும். பாஸ் என்கிற பாஸ்கரன்-2 வை அடிக்கிற அளவுக்கு இந்த படம் அமையும்.

சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் நானும், ஆர்யாவும் ஒற்றுமையாக இருக்கிறோம். வடக்குப்பட்டி ராமசாமி படம் மிகவும் சவாலான படம். ஏனென்றால், அனைத்து காமெடி நடிகர்களையும் வைத்து படம் இயக்குவது சவாலான விஷயம். ஆனால், கார்த்திக் யோகி இந்த படத்தை மிகவும் கருத்துள்ள, கதையுள்ள, காமெடி படமாக இயக்கியுள்ளார். டி.டி.ரிட்டன்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு ஒரு பெரிய ஹிட் தேவைப்பட்டது. அது இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் மூலம் கிடைக்கும் என நம்புகிறேன். டி.டி.ரிட்டன்ஸ் 2 படத்தை ஆர்யா இயக்குகிறார். அதில் நான் நடிக்க உள்ளேன்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தைப் பற்றி நிறைய சர்ச்சையாக பேசுகிறார்கள். அதுமாதிரி எதுவும் படத்தில் இருக்காது. இது ஒரு ஜாலியான படம். வடக்குப்பட்டி ராமசாமியின் கதை. இந்த பெயர் கவுண்டமணி காமெடியில் இருந்து வந்தது. நானும், இயக்குநரும் கவுண்டமணியின் ரசிகர்கள். அதனால் தான், இந்தப் பெயரை வைத்தோம்.

நான் சினிமாவிற்கு வந்தது ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக தான். யார் மனதை புண்படுத்த வரவில்லை. இது கடவுளுக்கும், ரசிகர்களுக்கும் தெரியும். ரசிகர்களுக்கு புதிதாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் புதிய பாதையில் பயணிக்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆர்யா, “நிறைய இயக்குநர்கள் இந்த படத்தை பாராட்டியுள்ளார்கள். டிக்கிலோனா என்ஜாய் செய்தது படத்தை மிகவும் என்ஜாய் செய்தேன். பெரிய பட்ஜெட் படம் என்று சொன்னார் நல்ல தயாரிப்பாளர் கிடைப்பார்கள் என்று நான் சொன்னேன். அதேபோல் நல்ல தயாரிப்பாளர் கிடைத்து கதையை நம்பி எடுத்த ஒரு படம் வடக்குப்பட்டி ராமசாமி” என்று கூறினார்.

இதையும் படிங்க:"எனது வார்த்தைகள் திசை திருப்பப்பட்டுள்ளது" "மகாத்மா காந்தி என் வாழ்வின் வழிகாட்டி" - அறிக்கை வெளியிட்ட ஆளுநர்!

ABOUT THE AUTHOR

...view details