தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பல்வேறு எதிர்பார்ப்புகளை குவித்து வரும் நரேனின் “ஆத்மா” படம்! எப்போது ரிலீஸ்? - காதிர்ஸ் எண்டர்டெயின்மெண்ட்

Athma Movie : சுசீந்திரன் இயக்கத்தில், நரேன் நடிப்பில் மிஸ்டரி, ஹாரர், திரில்லர் கலந்து உருவாகியுள்ள ஆத்மா திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

athma movie update
பல்வேறு எதிர்பார்ப்புகளை குவித்து வரும் நரேனின் “ஆத்மா” படம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 7:57 PM IST

Updated : Feb 2, 2024, 10:46 PM IST

சென்னை: நடிகர் நரேன் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற படங்களின் மூலம் நல்ல நடிகர் என்று பெயரெடுத்தவர். அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' (kaithi) படம் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதில் நரேனின் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது எனலாம். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில், காதிர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (KADRIS ENTERTAINMENT UAE) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில் மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா (Athma). இப்படத்தில் முக்கிய மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நரேன்.

அதாவது, ஆட்டிசம் என் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான கதைகளத்துடன் பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக திரைப்படம் உருவாகியுள்ளது ஆத்மா.

ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். K.சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன், காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஃபிலிப்பினோவைச் சேர்ந்த நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுமையாக துபாய் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்து இந்த படத்தை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எச்.வினோத் - கமல்ஹாசன் இணைப்பில் உருவான படம் கைவிடப்பட்டதா? ராஜ்கமல் பிலிம்ஸ் முக்கிய அறிவிப்பு

Last Updated : Feb 2, 2024, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details