தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மார்க்கெட்டைப் பற்றி நான் எப்போதும் யோசிக்க மாட்டேன்: நடிகர் மைக் மோகன் கருத்து - Haraa movie TEASER RELEASE - HARAA MOVIE TEASER RELEASE

Haraa Movie Teaser Release: நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரையுலகில் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியுள்ள மோகன் நடிக்கும் "ஹரா" படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Haraa movie
ஹரா திரைப்படம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 2:52 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் 80, 90களில் வெள்ளிவிழா நாயகனாக கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் மோகன். அவரை செல்லமாக ரசிகர்கள் 'மைக் மோகன்' என்று அழைத்தனர். நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியிடப்பட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சிங்கம் புலி, "நமஸ்காரம் சரவணன் எனும் நண்பரால் தான் இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் பவுடர் படத்தில் தான் முதல் வாய்ப்பு வந்தது.

ஷூட்டிங் ஸ்பாட் போனால், இயக்குநர் மூன்று கேமரா வைத்து காட்சிகளை எடுப்பார். அது வித்தியாசமாக இருக்கும். ஹரா' மாதிரி இன்னும் நிறைய படங்களை அவர் எடுக்க வேண்டும். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் தினமும் நிறையக் கூட்டம் இருக்கும். பட்ஜெட் பெரிதாகுமே எனக் கேட்டால், மோகன் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பார் இயக்குநர்.

இப்போதெல்லாம் ஒரு படத்தை விளம்பரப்படுத்த ஏதேதோ செய்கிறார்கள். ஆனால் இப்படத்திற்கு அது எதுவும் தேவை இல்லை, மோகன் ஒருவரே போதும். அவர் 5 படம் தான் மைக் பிடித்து நடித்தேன் என்கிறார். ஆனால் அது ஒவ்வொன்றும் 5 வருடம் ஓடியிருக்கிறதே. இன்றும், எங்கும் அவர் பாடல்கள் தான்" எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசுகையில், "இந்த மேடையில் ஏறி நிற்பேன் என நினைத்து பார்க்கவில்லை. காரில் போகும் போது ஒரு ஆக்ஸிடெண்ட். 16 லட்சம் செலவானது. மோகன், மோகன் ராஜ் இருவரும் தான் என்னைப் பார்த்துக் கொண்டார்கள். மோகன் மிகப்பெரிய ஆளுமை. ஆனால் ஒரு துளி கர்வம் கூட அவரிடம் இருக்காது. இந்தப் படத்திற்காக பேசும்போது, அவருக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது, அவரை வைத்து ஏன் படமெடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

ஆனால் கோயம்புத்தூரில் ஷூட் செய்யும்போது எங்கு போனாலும் 500 பேர் அவரைப் பார்க்க கூடி விடுவார்கள். அவர் வந்தால் தெரியும் அவர் மார்க்கெட் என்னவென்று. எல்லாவற்றையும் கடந்து அவரின் மனிதம் என்னை பிரமிக்க வைத்தது. படத்தில் மோகன் நடிப்பில் கலக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அவருக்கு இந்த 'ஹரா' மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்" என்றார்.

நடிகர் மோகன் பேசுகையில், "எத்தனையோ படம் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படங்களை எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. 'ஹரா' தான் என் முதல் படம். என்னுடைய பாட்டுகளைப் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு காரணம் இசைஞானி தான். அவர் அனைத்து நடிகர்களுக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். ஆனால், அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால், அதற்கு ஆர்.சுந்தர்ராஜன் மாதிரியான இயக்குநர்கள் தான் காரணம்.

அவர்கள், மக்களின் உணர்வுகளைப் புரிந்து படங்களை எடுத்து வெற்றி பெறச் செய்தார்கள். அதனால் தான், மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான், என் வெற்றிக்கு காரணம். நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன். ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான்.

ஏன் ஹராவை ஒத்துக் கொண்டீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். விஜய் ஶ்ரீயிடம் ஒரு ஃபெண்டாஸ்டிக்கான லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் (Light and Sound Sense) இருக்கிறது. அந்த திறமை அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும். விஜய் ஶ்ரீ அவருக்கு என்ன ஆனாலும், படத்தை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருப்பார்.

இந்தப் படத்தில் முதலில் பாடல்கள் இல்லை. ஆனால் தற்போது மூன்று பாடல்களை வைத்துவிட்டார். மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். மணிவண்ணன் மாதிரியான அறிவு கொண்டவர். ஏனெனில், மணிவண்ணன் தான் பேப்பரில் கதை இல்லாமல் படம் எடுப்பார். படத்தை பார்த்துவிட்டு, பிடித்தால் ஆதரவு தாருங்கள்" என்றார்.

இதையும் படிங்க:திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா! - Director Shankar Daughter Marriage

ABOUT THE AUTHOR

...view details