சென்னை:பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்கபடுத்தும் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறகட்டளை 45-வது ஆண்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி என மொத்தம் 26 பேருக்கு தலா ரூ.10,000 ஊக்கதொகை வழங்கப்பட்டது. இதில் பார்வை மாற்றுத் திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்து மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, "பெரிய அளவில் காசுக்கு ஆசைப்படாதவராக அப்பா இருந்துள்ளார். அப்பா, தொடங்கியதை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 'அகரம்' கையில் எடுத்தது. முன்பு முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு விருது வழங்கினோம். பிறகு அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து முதல் மதிப்பெண் எடுத்தார்கள் என்பதையும் முக்கியமாகப் பார்க்கிறோம்.