தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'ராயன்' பட ரிலீஸ்.. சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ்! - dhanush in rohini theatres - DHANUSH IN ROHINI THEATRES

dhanush watched raayan in rohini theatres: ராயன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் படத்தை கண்டுகளித்தார்.

ராயன் திரைப்படம் பார்க்க வந்த தனுஷ்
ராயன் திரைப்படம் பார்க்க வந்த தனுஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 11:54 AM IST

சென்னை: பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் இன்று(ஜூலை 26) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ராயன் படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் கோலிவுட்டில் பேசு பொருளானது. தனுஷ் ஏற்கனவே இயக்கி நடித்த பவர் பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ராயன் படத்தில் ரசிகர்கள் தனுஷை ஆக்‌ஷன் அவதாரத்தில் காண ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று ராயன் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகிணியில் தனுஷ் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்தார். அவருடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் திரையரங்கிற்கு வந்தனர். அதேபோல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ராயன் படத்திற்கு பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அவரது 25வது படமான வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராயன் திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வெளியானது ’ராயன்’... தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டம்! - Raayan release celebration

ABOUT THE AUTHOR

...view details