சென்னை: ஒவ்வொரு வருடமும் மொழி வாரியாக சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிலிம்பேர் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டிற்கான 68வது சவுத் பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ் திரைப்பட பிரிவில்,
சிறந்த திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த திரைப்படம் - கடைசி விவசாயி (critics விமர்சகர்கள் தேர்வு)
சிறந்த இயக்குநர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன் முதல் பாகம்)
சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (விக்ரம்)
சிறந்த நடிகர் - தனுஷ் (திருச்சிற்றம்பலம்) (critics விமர்சகர்கள் தேர்வு)
சிறந்த நடிகர் - மாதவன் (ராக்கெட்ரி) (critics விமர்சகர்கள் தேர்வு)
சிறந்த நடிகை - சாய் பல்லவி (கார்கி)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) (critics விமர்சகர்கள் தேர்வு)
சிறந்த துணை நடிகர் - காளி வெங்கட் (கார்கி)
சிறந்த துணை நடிகை - ஊர்வசி (வீட்ல விசேஷம்)
சிறந்த இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1 முதல் பாகம்)
சிறந்த பாடல் வரிகள் - தாமரை (மறக்குமா நெஞ்சம்)
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - சந்தோஷ் நாராயணன் (தேன்மொழி - திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - அந்தரா நந்தி (அலைக்கடல் - பொன்னியின் செல்வன் பகுதி 1)
சிறந்த அறிமுக நடிகர் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)
சிறந்த அறிமுக நடிகை - அதிதி ஷங்கர் (விருமன்)
சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1 முதல் பாகம்)
அதேபோல் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 7 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது. மேலும், சீதா ராம திரைப்படத்திற்காக துல்கர் சல்மான், மிருணால் தாகூர், சின்மயி, ஸ்ரீவெண்ணல சீதாராம சாஸ்திரி ஆகிய 4 கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளனர்.
மலையாளத்தில் சிறந்த படமாக நான் தான் கேஸ் கொடு, சிறந்த நடிகராக குஞ்சாக்கோ போபன், சிறந்த இயக்குநராக ரத்தீஷ் பால கிருஷ்ணன் பொடுவால் ஆகியோர் பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளனர். கன்னட மொழியில் சிறந்த இயக்குநர் மற்றும் நடிகராக ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகையாக சப்தமி கவுடா என காந்தாரா திரைப்படம் 7 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது.
இதையும் படிங்க:வேட்டையனுடன் கங்குவா, விடாமுயற்சி மோதலா? சரியாக இருக்காது.. வெளிவந்த சீக்ரெட்! - vettaiyan release