தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்தியாவில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொற்று விகிதம் அதிகம்: ஐசிஎம்ஆர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! - SURGICAL INFECTION RATE

இந்தியாவில் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய தொற்று நோயாளிகளிடம் அதிகம் இருப்பதாக ICMR என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை - கோப்புக்காட்சி
மருத்துவமனை - கோப்புக்காட்சி (ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 3:15 PM IST

புதுடெல்லி:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வில், இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை தள தொற்று (SSI) விகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WHO-ன் படி, அறுவை சிகிச்சையின் போது செய்யப்படும் கீறல்கள் மூலம் உள்ளே நுழையும் பாக்டீரியாக்களால் அறுவை சிகிச்சை தள தொற்றுகள் ஏற்படுகின்றன. அவை ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளில், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளில் 11% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கூறுகிறது.

இந்தியாவில் 3 முக்கிய மருத்துவமனைகளில் இருந்து 3,020 நோயாளிகளை தேர்வு செய்து ICMR ஆய்வு மேற்கொண்டது. டெல்லியில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை (JPNATC), மணிப்பாலில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனை (KMC) மற்றும் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை (TMH) ஆகியவற்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிந்தைய தொற்று அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அறுவை கிசிச்சைக்கு பிந்தைய தொற்று என்பது அதிகப்படியான மருத்துவ செலவுகளுக்கும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் கால அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேறிய பிறகு இந்த தொற்று குறைவாகவே உள்ளது. ஆனால், இந்தியாவில், மருத்துவமனைகளிலிருந்து வெளியேறிய பிறகு ஏற்படும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொற்று அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது," என்று ICMR ஆய்வு கூறுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொற்று 1.2 முதல் 5.2 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது.

"எங்கள் ஆய்வில் குஜராத்தில் (8.95 சதவீதம்) மற்றும் டெஹ்ராடூனில் (5 சதவீதம்) தொற்று இருப்பதாக தெரிய வந்தது. ஆனால், ஈரான் (17.4 சதவீதம்), எகிப்து (17 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (7.3 சதவீதம்) ஆக தொற்று உள்ளது" என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினார்.

பல்வேறு வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளுக்கு உட்பட்ட பிறகு 6 மாதங்களுக்கு நோயாளிகளைக் கண்காணித்ததன் விளைவாக இந்த ஆய்வு அமைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மொத்தம் 3,090 நோயாளிகளில் 161 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details