ஐதராபாத் : பிரபல சமூக வலைதளமான Reddit என்ற தளத்தில் @Horror-Entertainer65 என்ற பயனர் வெளியிட்ட பதிவு பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ரயிலில் ஜன்னல் ஓரே இருக்கையை பயணி இருவர் கோரிய நிலையில், அவருக்கு ஜன்னலே இல்லாத ஜன்னல் ஒரே இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதாவது இரண்டு ஜன்னல்களுக்கு இடையில் உள்ள பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டு அதில் அந்த பயணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜன்னல் இருக்கையை தேர்வு செய்து இருந்த தனக்கு ஜன்னலே இல்லாத ஜன்னல் இருக்கையை இந்திய ரயில்வே வழங்கி உள்ளதாக கூறி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பதிவுக்கு பலர் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் Ryanair விமானத்தில் பயணித்த பெண் பயணியும் இதே போன்ற சூழலை அனுபவித்ததாக வெளியிட்ட பதிவு வைரலானது.
ஜன்னல் ஓரே இருக்கையில் அமர்ந்து சுற்றுப்புற சூழலை ரசித்த வாறு வர விரும்பிய அந்த பெண் பயணி அதற்காக Ryanair விமானத்தில் ஜன்னல் இருக்கை பெற கூடுதல் பணம் வழங்கி உள்ளார். ஆனால் விமானத்தில் பயணித்த அவருக்கு அதிர்ச்சிகரமாக அவசரகால கதவு அருகே மிக சிறய ஜன்னல் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்து உள்ளது. இதுகுறித்து தனது ஆதங்கத்தை அந்த பெண் பயணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க :யூடியூப்பை குறிவைக்கும் எலான் மஸ்க்! எக்ஸ் தளத்தில் புது வசதிகள் அறிமுகம் செய்ய திட்டம்!