தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்னை பயங்கரவாதியாக மாற்றி இருப்பார்கள்? சட்டசபையில் ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ! - MLA QAISAR JAMSHEED LONE

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான கைசர் ஜம்ஷீத் லோன் தனது வாழ்வை மாற்றிய தருணம் குறித்த கதையை அனைவரின் முன்னிலையிலும் பகிர்ந்துகொண்டார்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை
ஜம்மு காஷ்மீர் சட்டசபை (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 1:34 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், குப்வாரா மாவட்டத்தின் லோலாப் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கைசர் ஜம்ஷீத் லோன், முன்னாள் அமைச்சரான கமது லோனின் மருமகன் ஆவார். கமது லோன் 1990ஆம் ஆண்டு பயங்கிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 8) ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அவரது வாழ்வில் நடந்த சம்பவம் குறித்து பேசினார். அதில் பேசிய அவர், “காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (Line Of Control) பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன் நான்.”

“1989 காலகட்டத்தில் இந்த இடத்தில் பயங்கிரவாதிகளின் புழக்கம் அதிகமாக இருந்தது. இதனாலேயே அந்த பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் சோதனை கடுமையாக நடக்கும். எனக்கு நன்றாக நியாபகம் உள்ளது. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு முறை காலை 6 முதல் மாலை 5 வரை இந்திய ராணுவம் தீவர சோதனையில் ஈடுபட்டது. அப்போது நான் உள்பட 33 இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் சித்திரவதைப்படுத்தினர்.”

இதையும் படிங்க:"அப்படியெல்லாம் செய்ய முடியாது".. கொல்கத்தா ஆர்..ஜி.கர் மருத்துவமனை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“என்னிடம் பயங்கிரவாதிகள் குறித்து தெரியுமா என கேட்டனர். ஆம் தெரியும் எனக் கூறினேன். நான் தெரியும் என கூறிய மறுகணமே, என்னை தடியால் பலமாக அடித்தனர். பின் நீண்ட நேரமாக அவர்கள் கட்டுபாட்டில் இருந்தேன். அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நானும் பயங்கரவாதியாகி ஆகி, இதுபோல் அடிவாங்காமல் எதிரே இருப்பவரை துப்பாகியினால் சுடலாம் என நினைத்தேன்.

வெகு நேரம் கழித்து என்னை அங்கு இருந்த மூத்த பாதுக்காப்பு படை அலுவலர், ‘எதிர்காலத்தில் என்னவாக ஆசை’ என என்னிடம் கேட்டார். அதற்கு நான் இதுவரை மருத்துவர், பொறியாளர், ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியாக ஆக ஆசைப்பட்டேன்; ஆனால் இதுபோது நீங்கள் என்னிடம் காட்டிய வெறுப்பு, தாக்குதலால் நான் பயங்கரவாதியாக மாற நினைக்கிறேன் என்றேன்.

அதில் அதிர்ந்து போன மூத்த அதிகாரி என்னை அடித்த உதவி அதிகாரியை அழைத்து என்னிடம் பேச வைத்தார். பின் அந்த மூத்த அதிகாரியே என்னை அழைத்து 20 நிமிடங்கள் பேசினார். அங்கு நிலவும் நிலைமை குறித்து விளக்கினார். அவர் பேசியதில் என் மனம் முழுமையாக மாறிவிட்டது. பின் நான் ஒரு நிதானமான நிலையில் சிந்திக்க ஆரம்பித்தேன். இந்த சோதனை முடிந்து பல ஆண்டுகள் கழித்து அன்று இருந்த 32 பேர் குறித்து எனக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

அதில் என்னுடன் இருந்த 32 பேரில் 27 பேர் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்துவிட்டதாகவும், பயங்கிரவாதிகளாக மாறி விட்டதாகவும் கூறினார். அதை கேட்டு அதிர்ந்துவிட்டேன். எனக்கும் அந்த மூத்த அதிகாரி அறிவுரை கூறவில்லை என்றால் என் நிலை என்னவாகியிருக்கும் என சிந்தித்தேன். அப்போது தான் அறிவுரை மற்றும் பேசு வார்த்தையின் மகத்துவத்தை அறிந்தேன்,” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details