டெல்லி :மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎள் ஐஎப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி குடிமைப் பணிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். லக்னோவை சேர்ந்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் பிடித்து உள்ளார். அனிமேஷ் பிரதான், டோனூரு அனன்யா ரெட்டி ஆகியோர் முறையே இரண்டு மற்றும் 3வது இடங்களை பிடித்து உள்ளனர்.
மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்ச்சி பெற்று உள்ள நிலையில் அதில் 664 பேர் ஆண்கள் மற்றும் 352 பெண்கள் ஆவர். தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நியமனம் செய்ய தேர்வு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களில் மூன்று பேர்ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆவர்.
யுபிஎஸ்சி தேர்வுகள் முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெறும் போட்டியாளர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் மத்திய அரசு பணிகள் வழங்கப்படுகின்றன.
தேர்வானவர்களின் மதிப்பெண் பட்டியல் அடுத்த 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டு, ஆட்சியர்கள், மாவட்ட வன அலுவலர்கள், பாஸ்போர்ட் அதிகாரி, வருமான வரி, ஜிஎஸ்டி வரி அலுவலர்கள், வெளியுறவுத்துறை ஆணையர்கள் உள்ளிட்ட பயிற்சி பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல்:
1. ஆதித்ய ஸ்ரீவஸ்தவா
2. அனிமேஷ் பிரதான்
3. டோனூரு அனன்யா ரெட்டி