நீங்கள் வழக்கமாக சாப்பிடும் சப்பாத்தியை ஆரோக்கியமாக மாற்ற வேண்டுமா? கூடுதலாக, சப்பாத்தியின் சுவை மற்றும் ஊட்டச்சத்துகளின் மதிப்பை அதிகரிக்க என்ன செய்வது? என நினைத்தால் அளி விதை பொடியை கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்து பாருங்கள். நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஆளி விதை பொடியை சேர்ப்பதன் மூலம் சப்பாத்தியின் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது.
ஃப்ளாக்ஸ் சீட்ஸ் (Flax Seeds) என்றழைக்கப்படும் ஆளி விதைகள், அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த, ஆளிவிதைகள் பெரும்பாலும் கோதுமை மாவு, பால், ஸ்மூத்திஸ்கள் மற்றும் இனிப்புகளுடன் சேர்க்கப்படுகின்றன. இந்நிலையில், கோதுமை மாவுடன் இந்த ஆளி விதைகளை சேர்க்கும் போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஊட்டச்சத்து அதிகரிக்கும்: கோதுமை மாவில் ஆளிவிதைகளை பொடி செய்து சேர்ப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன. ஆளிவிதையில் உள்ள நார்ச்சத்து, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble Fiber), செரிமானத்திற்கு உதவுவதோடு இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் லிக்னான்களையும் கொண்டுள்ளது.
அந்த வகையில், ஆளிவிதை பொடியை கோதுமை மாவுடன் கலக்கும்போது, மேல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நன்மைகளும் கிடைத்து உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும்.
சப்பாத்தியை சாஃப்டாக மாற்றும்: ஆளிவிதை பொடி ஈரப்பதத்தை உறிஞ்சும் இயற்கையான திறனைக் கொண்டுள்ளது. இது கோதுமை மாவில் சேர்க்கப்படும் போது, மாவை சாஃப்டாக மாற்றுவதோடு ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. இதனால், bake செய்யப்பட்ட உணவுகள் விரைவாக உலர்வதில் இருந்து தடுத்து நீண்ட நேரத்திற்கு பஞ்சு போன்று இருக்க செய்கிறது. இந்நிலையில், கேக், பரோட்டா, ரொட்டிகள் செய்யும் போது கொஞ்சம் ஆளி விதை பொடியையும் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சப்பாத்தி சூப்பர் சாப்டாக வர மாவை இப்படி பிசைந்து பாருங்க..அசந்து போய்ருவீங்க! - How to Make Soft Chapati at Home
நீரிழிவை கட்டுப்படுத்தும்: இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனுக்காகவே ஆளிவிதைகள் அறியப்படுகின்றன. இதில் உள்ள ஃபைபர் உள்ளடக்கம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி செய்யும் போது, இந்த பொடியையும் சேர்த்து செய்வதால் அவர்களின் ஒட்டுமொத்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவியாக இருக்கும். NCBI நடத்திய ஆய்வில், நீரிழிவு நோயைத் தடுப்பதில் ஆளி விதைகள் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.
- இது தவிர, மாதவிடாய், மலச்சிக்கல் மற்றும் மன சோர்வுடன் தொடர்புடைய அறிகுறிகளின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கவும் சருமத்தை பராமரிக்கவும் உதவியாக இருக்கிறது.
- ஆளி விதையில் உள்ள ஒமேகா 3 அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகளை அழிப்பதோடு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜனான லிக்னான்ஸ் (Lignans) எனும் ஆன்டியாக்ஸிடன்ஸ் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: கோதுமை மாவுடன் 'இந்த' மாவை சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள்.. கொழுப்பு தானாக கரையும்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.