திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலுக்கு நண்பர்களுடன் சென்று இருந்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், சாமி தரிசனத்திற்காகா காத்திருந்த பக்தர்களை ஏமாற்றுவது போல் பிராங்க செய்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் மூன் கோயில் ஊழியர்கள் போல் தோன்றிய டிடிஎப் வாசன் மற்றும் அவரது நண்பர் காத்திருப்பு அறையின் கதவை திறக்க முயல்கின்றனர்.
தங்களது காத்திருப்பு நேரம் நிறைவடைந்து விட்டது. அறைக் கதவு திறக்கப்படுகிறது என நினைத்த பக்தர்கள் அனைவரும் உடனடியே எழுந்து நின்று கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பக்தர்களின் பரவச அலை வீசத் தொடங்கியது.
இந்த வீடியோவை திருப்பதி ஃபன்னி வீடியோ என்ற தலைப்பில் தனது சமூக வலைதள பக்கத்தில் டிடிஎப் வாசன் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தனம் போர்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.