சென்னை : இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025க்காக, சிறப்பு முகாம்கள் 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும், மாநிலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடைபெற்றன.
மேற்கூறிய சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தல்/ இடமாற்றம்/ ஆதார் எண்ணை இணைப்பதற்காக பெறப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:-
வ.எண் | படிவத்தின் வகை | 23.11.24 | 24.11.24 | சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட ஏற்புரை மற்றும் மறுப்புரைகளின் மொத்த எண்ணிக்கை |
1 | படிவம் 6 (பெயர் சேர்த்தல்) | 1,53,904 | 2,42,077 | 3,95,981 |
2 | படிவம் 6A (வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்த்தல்) | 2 | 2 | 4 |
3 | படிவம் 6B (ஆதார் எண் இணைப்பு) | 157 | 207 | 364 |
4 | படிவம் 7 (பெயர் நீக்கம்) | 27,326 | 48,247 | 75,573 |
5 | படிவம் 8 (முகவரி, புகைப்படம் மாற்றம்) | 91,955 | 1,51,225 | 2,43,180 |
மொத்தம் | 2,73,344 | 4,41,758 | 7,15,102 |
இதுவரை, அனைத்து சிறப்பு முகாம் நாட்களிலும் (16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024) மொத்தம் 14,00,615 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : வாக்காளர் சிறப்பு முகாம்: அயோத்தி குப்பத்தில் திமுக - தவெகவினர் இடையே திடீர் மோதல்!
பெறப்பட்ட படிவங்களின் ஒருங்கிணைந்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
வ.எண் | படிவத்தின் வகை | 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட ஏற்புரை மற்றும் மறுப்புரைகளின் ஒருங்கிணைந்த விவரங்கள் |
1 | படிவம் 6 | 8,38,016 |
2 | படிவம் 6A | 4 |
3 | படிவம் 6B | 783 |
4 | படிவம் 7 | 1,19,701 |
5 | படிவம் 8 | 4,42,111 |
மொத்தம் | 14,00,615 |
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்