ETV Bharat / bharat

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் யார்? மகாயுதி கூட்டணியில் தொடரும் ஆலோசனை!

மகாயுதியின் மூன்று கட்சிகளின் அவை தலைவர்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்வார்கள் என துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார்
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் (Image credits-PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மும்பை: தேவேந்திர பட்நாவிஸ் அல்லது ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரில் யார் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மகாயுதி கூட்டணியின் இரண்டு முக்கிய கட்சிகளான பாஜக, சிவசேனா இடையே, யார் எவ்வளவு காலத்துக்கு முதலமைச்சர் பதவி வகிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், "முதலமைச்சர் பதவியைப் பொறுத்தவரை என்னமாதிரியான திட்டம் மேற்கொள்ளப்படும் என்று இதுவரை எந்த ஆலோசனையும் நடைபெற வில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அவைத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

அதே போல சிவசேனாவின் அவைத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவிலும் அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட உ்ள்ளார். இதன் பின்னர் மூன்று அவைத் தலைவர்களும் முதலமைச்சர் பதவி குறிதது இணைந்து ஆலோசனை மேற்கொள்வோம். எங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இப்போதைக்கு அவசரமாக பதவி ஏற்க வேண்டிய அவசியம் எழவில்லை. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பதவி ஏற்பு விழா நடைபெறும்,"என்றார்.

இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது துவக்கம்? - சபாநாயகர் அப்பாவு தகவல்!

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவாளர்கள், மகாயுதியில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் வகையில் பெரிய கட்சிகள் தலா இரண்டு ஆண்டுகளும், மீதம் உள்ள கட்சி ஒரு ஆண்டும் முதலமைச்சர் பதவியை வகிக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான சுதிர் முங்கண்டிவார் கூறியுள்ளார். "இது போன்ற ஒரு திட்டம் எடுபடாது.மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்கள், பாஜக டெல்லி தலைவர்கள் ஆகியோர் கூட்டாக ஆலோசனை செய்து முதலமைச்சர் பதவி குறித்து முடிவுஎடுப்பார்கள். இதில் பிரச்னை என்பதற்கே இடம் இல்லை,"என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.