மீரட்: உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியின் போது மணமகனுக்கு வழக்கமான குதிரை சவாரி ஊர்வலம் நடந்துள்ளது. இது வட மாநிலத்தில் 'குர்ச்சாதி' என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், குதிரை சவாரி ஊர்வலம் நடந்து முடிந்த பிறகு மணமகன் ரூபாய் நோட்டுகளுடன் பின்னியிருந்த மாலையை அணிந்துகொண்டு கோயிலுக்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் மணமகன் கழுத்தில் அணிந்திருந்த மாலையின் ரூபாய் நோட்டுகளை கொத்தாக பிடுங்கிக்கொண்டு தப்பித்து ஓடியுள்ளார்.
மேலும், அப்போது அவ்வழியே வந்த டாடா ஏசி வாகனத்தில் அந்த இளைஞர் ஏறியுள்ளார். இதனால், ஆவேசமான அந்த மருமகன் திருமண சடங்கை அப்படியே விட்டுவிட்டு, திருடன் தப்பி சென்ற அந்த வாகனத்தை பின் தொடர்ந்து ஓடி, ஒரு வழியாக அந்த வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே பிடித்து மேலே ஏறி கதவுக்கு மேல் உள்ள ஜன்னல் வழியாக சென்று திருடனை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: கோயில் இடத்தில் மசூதி.? உ.பி. சம்பல் கலவரத்தில் 4 பேர் பலி.. மாவட்டத்துக்குள் வெளி ஆட்கள் வர தடை..!
பிறகு அந்த வாகனத்தை நிறுத்தி திருடனை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் திருடன் மன்னிப்பு கேட்டதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த பெரியவர்கள் அந்த திருடனை போக வைத்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. சினிமாக்களில் பல லட்சம் செலவு செய்து ஹீரோக்களுக்கு டூப் போட்டு இதுபோன்ற காட்சிகளை மிகுந்த பாதுகாப்புடன் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பணத்தை திருடி சென்ற திருடனை ஓடும் வாகனத்திலேயே ஏறி பிடித்த மணமகனின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்