ETV Bharat / state

கனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறை கலெக்டர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - RAIN WARNING IN MAYILADUTHURAI

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் மழை சேதம் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Mayiladuthurai Collector A.P.Mahabharathi IAS
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 9:05 PM IST

மயிலாடுதுறை: இந்திய வானிலை மையம் நாளை (நவ.26) முதல் வியாழக்கிழமை (நவ.28) வரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 தானியங்கி மழைமானி மையம், 3 தானியங்கி வானிலை மையம் மற்றும் 6 மழைமானி உள்ளது. 19 விஎச்எப்-ஒயர்லாம் செயல்பாட்டில் உள்ளது. சாட்டிலைட் போன் தயார் நிலையில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் பருவமழை காலங்களில் சுழற்சி முறையில் அனைத்து துறை அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை கருவிகள்: 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள், 362 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 146 திருமண மண்டபம், 68 சமுதாய கூடம் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 இடங்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக 33 இடங்கள், குறைந்த அளவு பாதிக்கக்கூடிய இடங்களாக 80 இடங்கள், மிக குறைந்த பாதிக்கக்கூடிய இடங்களாக 76 இடங்கள் என மொத்தம் 201 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, மொத்தம் 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள். புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக அனைத்து துறைகளிலும் 85 ஜெசிபி, 164 ஜெனரேட்டர்கள், 57 பவர் சா, 31 ஹிட்டாச்சி, 40351 ஆயில் என்ஜின்கள் மணல் மூட்டைகள், 84 மரம் அறுக்கும் கருவிகள், 34110 சவுக்கு கம்பங்கள், 5870 கிலோ பிளிச்சிங் பவுடர் ஆகியன போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தனித்தனிக்குழுக்கள் அமைப்பு: வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு தங்குமிடம் மற்றும் பராமரிப்பு குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்து துறை அலுவலர்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளார்கள்.

மேலும், நீச்சல் நன்கு தெரிந்த தன்னார்வ நபர்கள் 80 பேர் அலைபேசி எண்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பருவகால ஆய்வுகள் செய்யப்பட்டு 314 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. மின் பாதையில் இடையூறாக இருந்த 2219 மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றப்பட்டுள்ளது. 5600 மின்கம்பங்கள் இருப்பு உள்ளது. 44 மின்மாற்றிகள் அவசர காலத்திற்கு பயன்படுத்திட இருப்பு உள்ளது.

கட்டுப்பாட்டு அறை எண்: நாளை (நவ.26) மற்றும் நாளை மறுநாள் (நவ.27) ஆகிய இருதினங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளதால் கனமழையும் அதி தீவிர மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் எனவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திடவும், அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல, பொதுமக்கள் மழை சேதம் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364-222588 என்ற எண்களுக்கு புகார்களை தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.