தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலங்கானா எம்எல்சி கவிதாவின் காவல் நீட்டிப்பு! - Kavitha Custody Extend

Telangana MLC Kavitha custody extendடெல்லி மதுபான கொள்கை பணமோசடி வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவின் காவலை மார்ச் 26ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 2:22 PM IST

டெல்லி : தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதாவுக்கு டெல்லி மதுபான கொள்கை பணமோசடி வழக்கில் விதிக்கப்பட்ட காவலை மார்ச்.26ஆம் தேதி வரை நீடித்து டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவின் காவல் இன்றுடன் (மார்ச்.23) நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அவரை டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அஜர்படுத்தியது. பண மோசடி வழக்கில் கவிதாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.

பிஆர்எஸ் கட்சித் தலைவரின் மருமகன் மேகா சரணின் வீட்டில் சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து கவிதாவின் காவலை மார்ச் 26ஆம் தேதி வரை நீடித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தனது கைது சட்டவிரோதமானது எனக் கூறிய கவிதா, தனது கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்தார்.

முன்னதாக பண மோசடி வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி எம்எல்சி கவிதா மனுத் தாக்கல் செய்த நிலையில் அதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மதுபான கொள்கை பண மோசடி விவகாரத்தில் கடந்த மார்ச் 15ஆம் தேதி தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கவிதாவை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்றுடன் (மார்ச்.23) கவிதாவின் நீதிமன்றக் காவல் நிறைவு பெறும் நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கூடுதலாக 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இந்நிலையில், அவரது காவலை மார்ச் 26ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதே வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படு அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை! திடீர் ரெய்டுக்கு என்ன காரணம்? - CBI Raid In Mahua Moitra House

ABOUT THE AUTHOR

...view details