தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பைக் மீது மோதிவிட்டு 2 கி.மீ தீப்பெறி பறக்க இழுத்துச் சென்ற லாரி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Hyderabad lorry bike accident - HYDERABAD LORRY BIKE ACCIDENT

Hyderabad lorry bike accident: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பைக் மீது லாரி மோதி 2 கி.மீ வரை இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

hyderabad accident viral video
hyderabad accident viral video

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 4:15 PM IST

ஹைதராபாத் லாரி விபத்து

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கர்மன்காட் (Kharmanghat) பகுதியில் அண்மையில் அரங்கேறிய லாரி விபத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத் நகரில் உள்ள எல்.பி.நகர் எனும் பகுதிக்கு அடுத்துள்ளது கர்மன்காட் எனும் இடம்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கர்மன்காட் பதியில் சென்று கொண்டிருந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி சுமார் 2 கி.மீ தூரம் வரை இழுத்துச் சென்றது. விபத்தின் போது பைக் மீது லாரி மோதுவதை சுதாரித்துக் கொண்ட பைக் ஓட்டுநர், லாரியில் கதவை பிடித்து தொங்கிய படி சென்றுள்ளார். மேலும், லாரி ஓட்டுநரை நிறுத்தும் படி எச்சரித்துள்ளார்.

அதனை பொருட்படுத்தாக லாரி ஓட்டுநர் வேகமாக இயக்கி பைக்கை சுமார் 2 கி.மீ தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவத்தை லாரியை பின் தொடர்ந்து வந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிரிந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதிவேகமாக சென்ற லாரி, வனஸ்தலிபுரம் பகுதிவரை சென்றது. ஒருவழியாக ஓட்டுநர் லாரியை நிறுத்தியதும், அவரை படித்த வாகன ஓட்டிகள் வனஸ்தலிபுரம் காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநரை ஒப்படைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், லாரி ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:குஜராத்தில் கார் - டிரக் மோதி கோர விபத்து! 10 பேர் பலி! எப்படி நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details