தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்பானீஷ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேர் கைது! போலீசார் கூறும் முக்கியத் தகவல் என்ன?

Spanish Woman Gang Rape case: ஸ்பானீஷ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 7:47 PM IST

தும்கா : இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பானீஷ் பெண் ஒருவர் தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம், பாகல்பூரில் இருந்து தும்காவிற்கு நள்ளிரைவில் பைக் ரெய்டு சென்று உள்ளார். நள்ளிரவு நெருங்கியதை அடுத்து ஹன்சிதா மார்க்கெட் பகுதியில் அந்த பெண் டென்ட் அடித்து தங்கி உள்ளார்.

இதனிடையே, அங்கு வந்த சில இளைஞர்கள் ஸ்பானீஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஸ்பானீஷ் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னை சில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி இருந்தார்.

ஸ்பானீஷ் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு தும்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ராஜன் மராண்டி, பிரதீப் கிஸ்கு, சுக்லால் ஹெம்பரம் என மூன்று பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் சிஐடி போலீசார் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குற்றம் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.

முன்னதாக ஸ்பானீஷ் பெண் ஜார்கண்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும், சம்பவத்தின் போது மூன்று பேரும் மது போதையில் இருந்ததாகவும் வெளிநாட்டு தம்பதியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம், தங்க மோதிரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே சிகிச்சை பெற்று வரும் ஸ்பானீஷ் பெண்ணை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி நேரில் சென்று விசாரித்து நடந்தவற்றை குறித்து புகாரக கேட்டறிந்தார்.

இதையும் படிங்க :ஸ்பெயின் பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை! சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details