டெல்லி:2024 - 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட்டாகும். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் சுமார் 1.30 மணிநேரம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதில் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன், புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் 2024- 2025ஆம் காலாண்டிற்கான துறை ரீதியாக ஒதுக்கீடு செய்த நிதி எவ்வாளவு என்பதைப் பார்ப்போம்.
துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்
- பாதுகாப்புத் துறை -ரூ. 4 லட்சத்து 54 ஆயிரம் கோடி
- கிராமப்புற வளர்ச்சி -2 லட்சத்து 65 ஆயிரம் கோடி
- விவசாயம் மற்றும் வேளாண்துறை- 1 லட்சத்து 51 ஆயிரம் கோடி.
- உள்துறை அமைச்சகம்- 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி
- கல்வி, திறன் மேம்பாடு- ரூ.1.48 லட்சம் கோடி
- தகவல் தொழில்நுட்பத்துறை- 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி
- சுகாதாரத்துறை - 89 ஆயிரத்து 287 கோடி
- எரிசக்தி - 68 ஆயிரத்து 769 கோடி ஒதுக்கீடு
- சமூக நலத்துறை- 56 ஆயிரத்து 501 கோடி
- வணிகம் மற்றும் தொழில்துறை - 47ஆயிரத்து 559 கோடி
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்: பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!