டெல்லி:சர்ச்சைக்குரிய சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதேநேரம், தேர்தல் அதிகாரி அனில் மசிஹை கண்டித்து அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் நியமித்த நீதித்துறை அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குச் சீட்டுகளைப் ஆய்வு செய்த பிறகு உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்து உள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - சண்டிகர் மேயர் தேர்தல் ஆம் ஆத்மி
சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளார் குல்திப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
Published : Feb 20, 2024, 4:57 PM IST
|Updated : Feb 22, 2024, 12:12 PM IST
கடந்த ஜனவரி 30ஆம் தேதி நடந்த மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக சண்டிகர் மேயர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும், 8 உறுப்பினர்களின் வாக்குகள் செல்லுபடியாகும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சண்டிகர் மேயர் தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!