தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

6வது நாளாக தொடரும் வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணிகள்.. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! - Wayanad Landslides Rescue today - WAYANAD LANDSLIDES RESCUE TODAY

Wayanad landslides 6th day rescue: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ANI

Published : Aug 4, 2024, 10:31 AM IST

வயநாடு:கேரள மாநிலம், வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 308 பேர் (வெள்ளிக்கிழமை வரை) உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 215 பேரின் சடலங்கள், 143 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றில் 98 ஆண்கள், 87 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் அடங்குவர்.

அதேநேரம், 212 உடல்கள் மற்றும் 140 உடல் பாகங்களுக்கு பிரேதப் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. மேலும், 148 சடல்ங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றும் (ஆகஸ்ட் 4) மீட்புப் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகாஸ்ரீ, “முழுவீச்சில் மீட்புப் பணிகள் சென்று கொண்டிருக்கிறது. இன்று 1,300க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் களத்தில் உள்ளனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் உள்ளனர். நேற்று மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நிலச்சரிவில் தப்பி யானைக் கூட்டத்தின் முன் அந்த நொடி.. மெய்சிலிர்க்கும் வயநாடு மூதாட்டியின் அனுபவம்!

மேலும், நேற்று இந்திய விமானப் படையில் ZAWER மற்றும் நான்கு REECO ரேடார்கள் சியாச்சன் மற்றும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு நிலச்சரிவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய கப்பற்படை, ராணுவம் ஆகியவையும் சூச்சிப்பாரா அருவி அருகே மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு நடவடிக்கைகளில் திரையுலகம்: வயநாடு நிலச்சரிவிற்கு விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, கமல்ஹாசன், ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், மம்மூட்டி, மோகன்லால், நிகிலா விமல், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நிதியுதவி மற்றும் களத்தில் சேவையாற்றி வருகின்றனர். அதேநேரம், மலையாளத் திரையுலகம் வயநாடு நிலச்சரிவால் சராசரியாக 30 கோடி ரூபாய் அளவில் இழப்பைச் சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“பாறைகளின் கீழே கேட்ட அந்த அலறல் சத்தம்..” வயநாடு நிலச்சரிவில் 16 உறவினர்களை பறிகொடுத்தவரின் ரணம் கலந்த பகிர்வு!

ABOUT THE AUTHOR

...view details