ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் கப்பல் முனையம்... மார்ச் முதல் முழுமையாக செயல்படும்! - VISAKHA CRUISE TERMINAL

விசாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் கப்பல் முனையம் ரூ.96.05 கோடி செலவில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2025, 3:18 PM IST

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் கப்பல் முனையம், சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் விசாகப்பட்டினத்தை இடம் பெற செய்யும் வகையில் தேவையான அனைத்து விதமான நவீன வசதிகளுடன் மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.96.05 கோடி கட்டமைப்பு: இதன் கட்டுமானத்துக்காக ரூ.96.05 கோடி செலவிடப்படுகிறது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ரூ.38.50 கோடி பங்களிப்பு நிதியுடன் கூட்டாண்மை அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினம் துறைமுக அறக்கட்டளையானது ரூ.57.55 கோடி செலவிடுகிறது. கப்பல் வடிவில் கட்டப்படும் இந்த முனையத்தில், 2,000 பயணிகளைக் கொண்ட கப்பல்களை நிறுத்தமுடியும்.

அதி நவீன வசதிகள்: இந்த முனையமானது சுங்கம், குடிபெயர்வு வழிகாட்டுதல்களுக்கான மையங்கள், சில்லறை விற்பனையங்கள், வரிவிலக்கு பொருட்களைக் கொண்ட கடைகள், உணவு கடைகள், பயணிகளுக்கான ஓய்வறைகள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இந்த முனையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 2023ஆஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. எனினும் இந்த முனையத்தின் முழு அளவிலான செயல்பாடுகள் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இரண்டாம் உலகப்போரில் இடம் பெற்ற உலகின் மிக வசதியான பயணிகள் கப்பல் வரும் ஏப்ரல் மாதம் இங்கு நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: வருங்கால வைப்பு நிதி, யுபிஐ பணப்பரிமாற்றங்களில் புதிய முறை... மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

கோர்டெலியா, ராயல் கரீபியன் மற்றும் எம்எஸ்சி ஆகிய முக்கியமான பயணிகள் கப்பல்களை விசாகப்பட்டினத்தில் இருந்து இயக்கும்படி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விசாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை போன்ற சர்வதேச நாடுகளுக்கும் கப்பல்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல சென்னை, சுந்தர்பான் போன்ற உள்ளூர் பகுதிகளுக்கும் கப்பல்கள் இயக்கப்பட உள்ளன.

துறைமுகத்தின் வெளிப்புறப்பகுதியில் கப்பல்களை நிறுத்தும் வகையில் ரூ.100 கோடி செலவில் விசாகப்பட்டினம் சர்வதேச கப்பல் பயண முனையத்தை விசாகப்பட்டினம் துறைமுகம் மேற்கொண்டது. இது மத்திய கப்பல்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆந்திரா முதல் மேற்கு வங்கம் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் இது முதலாவது பயணிகள் கப்பல் முனையமாகும். இதில் 50,000 முதல் ஒரு லட்சம் வரையிலான அதிக பட்ச எடைகொண்ட பனாமா கப்பல்கள் போன்றவற்றை இங்கு நிறுத்த முடியும். விசாகப்பட்டினத்தின் 330 மீட்டர் நீளமுள்ள கப்பல் நிறுத்தும் இடத்தில் 2000 முதல் 2500 பயணிகள் கொண்ட கப்பல்களை நிறுத்த முடியும். இந்த முனையத்தில் ஓய்வறை, சுங்கம், குடியுரிமை, பொழுதுபோக்கு பகுதி, கழிவறைகள், வரியில்லா கடைகள் மற்றும் நாணய மாற்று மையங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.