மதுரை: திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. அதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில்,
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:
- "செங்கோட்டையில் இருந்து ஜனவரி 4, 7, 8, 11 ஆகிய நாட்களில் காலை 07.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில் (வண்டி எண் - 16848)
- நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 9 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (வண்டி எண்- 16352)
- குருவாயூரிலிருந்து ஜனவரி 3, 6, 8, 10 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் - 16128)
- கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 4 மற்றும் 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில் (வண்டி எண் - 12666)
- நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 7ஆம் தேதி புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (வண்டி எண் - 16340)
- நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 4 மற்றும் 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (வண்டி எண் - 16354)
ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும். இதில், பயணிகளின் வசதிக்காக மயிலாடுதுறை ரயில் மானாமதுரை மற்றும் காரைக்குடியிலும், மற்ற ரயில்கள் மானாமதுரையிலும் நின்று செல்லும்.
In view of Line Block/Power Block for facilitating engineering works in Tiruchchirappalli – Dindigul Section, the following changes have been made in pattern of Train Services#SouthernRailway pic.twitter.com/TLiE9h5Fki
— Southern Railway (@GMSRailway) January 2, 2025
இதையும் படிங்க: ஹவுரா-சென்னை தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்...விரைவில் அறிமுகம் என மத்திய அரசு அறிவிப்பு!
- அதேபோல, மயிலாடுதுறையிலிருந்து ஜனவரி 9 மற்றும் 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண் -16847)
- கச்சக்குடாவிருந்து ஜனவரி 10 ஆம் தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயில் (07435)
- பனாரஸிலிருந்து ஜனவரி 5 ஆம் தேதி புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) ஆகிய ரயில்கள் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்
- மேலும், நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 4, 7, 9, 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (வண்டி எண் - 16321 / 16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்
- மதுரையிலிருந்து ஜனவரி 9 ஆம் தேதி புறப்பட வேண்டிய பிகானிர் விரைவு ரயில் (வண்டி எண் - 22631) திண்டுக்கல் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்
- குஜராத் ஒகாவிலிருந்து ஜனவரி 7 ஆம் தேதி புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் ரயில் (வண்டி எண் - 16734) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்
- கொல்லத்திலிருந்து ஜனவரி 11 ஆம் தேதி புறப்பட வேண்டிய செகந்திராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண் - 07176) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்
பகுதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
- சென்னை எழும்பூர் மற்றும் மதுரையிலிருந்து ஜனவரி 7ஆம் தேதி புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில்கள் (வண்டி எண் - 22671 / 22672) திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்
- ஈரோட்டில் இருந்து ஜனவரி 6 அன்று புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண் - 16845) மற்றும் செங்கோட்டையில் இருந்து ஜனவரி 7 ஆம் தேதி புறப்பட வேண்டிய ஈரோடு (வண்டி எண் - 16846) விரைவு ரயில் ஆகியவை கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கரூர் வரை மட்டும் இயக்கப்படும்
- பாலக்காடு மற்றும் திருச்செந்தூரில் இருந்து ஜனவரி 9 மற்றும் 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் மற்றும் பாலக்காடு ரயில்கள் (வண்டி எண் - 16731 / 16732), திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்
- ஓகாவில் இருந்து ஜனவரி 6 மற்றும் மதுரையில் இருந்து ஜனவரி 10 ஆம் தேதி புறப்பட வேண்டிய மதுரை மற்றும் ஓகா சிறப்பு ரயில்கள் (வண்டி எண் - 09520 / 09519), விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.