தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆரோக்கியத்தை வளர்க்கும் சபாலா மில்லட்ஸ்: ராமோஜி குழுமத்தின் புதிய அறிமுகம்..!

ராமோஜி ராவின் 88-வது பிறந்தநாளையொட்டி, ராமோஜி குழுமம் சபாலா மில்லட்ஸ் என்ற 45 வகையான சிறுதானிய உணவு பொருட்களை ராமோஜி பிலிம் சிட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Sabala Millets-Bharat Ka SuperFood
சபாலா மில்லட்ஸ்-பாரத் கா சூப்பர் ஃபுட் (Credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ஹைதராபாத்: ராமோஜி ராவின் 88-வது பிறந்தநாளையொட்டி, ராமோஜி குழுமம் 'சபாலா மில்லட்ஸ்-பாரத் கா சூப்பர் ஃபுட்' (Sabala Millets-Bharat Ka SuperFood) என்ற சிறுதானிய உணவு பொருட்களை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இன்று (நவ.16) வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில், சபாலா மில்லட்ஸின் இயக்குநர் சஹாரி செருகுரி பேசுகையில், "சபாலா தினைகள் ஆரோக்கியத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

இது பாரம்பரிய இந்திய தானியங்களுக்கும் நவீன சமையல் வகைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. சமச்சீரான ஊட்டச்சத்தை சிறந்த சுவையுடன் கலக்க வேண்டும் என்ற எங்களின் உறுதியான தீர்மானத்தை இது வகைப்படுத்துகிறது. ஆரோக்கியமான பாரதத்திற்கான ராமோஜி ராவின் தொலைநோக்கு கனவுகளை நிறைவேற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், எங்கள் நிறுவனர் ராமோஜி ராவின் பிறந்தநாளில் இந்த சிறுதானிய உணவு பொருட்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.

உணவு நுகர்வு முறைகளில் நேர்மறையான மற்றும் முறையான மாற்றத்தை வளர்ப்பதற்கும், சமச்சீர் ஊட்டச்சத்தை ஊக்குவிப்பதற்கும் மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிராண்டாக சபாலா இருக்கும். இந்த முயற்சியானது நுகர்வோர் ஆரோக்கியத்திற்கான குழுவின் அர்ப்பணிப்பில் ஒரு மாற்றமாக இருக்கும். மேலும், ஊட்டச்சத்து ஒருமைப்பாட்டை சமரசம் செய்யாமல் நவீன மற்றும் ஆரோக்கியமான உணர்வுள்ள வாழ்க்கை முறையைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட சிறுதானியங்களை அடிப்படையாக கொண்டு இந்த தயாரிப்புகளை வழங்குகிறோம்.

இதையும் படிங்க:ராமோஜி ராவ்: எல்லோருக்குமான எதிர்காலத்தை கனவு கண்டவர்

சபாலா மில்லட்ஸ் அதன் நுகர்வோருக்கு பலவிதமான சத்தான மற்றும் சுவையான தயாரிப்புகளை கொடுக்க உறுதிபூண்டுள்ளது. அதன் முதல் கட்டத்தில், பல்வேறு மாநிலங்களின் கிச்சடியில் இருந்து (உப்புமா வகைகள்) தினை சார்ந்த குக்கீஸ், ஹெல்த் பார்கள் மற்றும் நூடுல்ஸ் வரை 45 வகையான தயாரிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியாவின் உணவு வகையை வளப்படுத்துகின்றன.

இதுமட்டும் அல்லாது, சபாலா மில்லட்ஸ் உயர்தர, இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவை புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றலைக் கொண்டுள்ளது. அத்தோடு, இது ஆரோக்கியமான உணவு விருப்பங்களைத் தேடும் நுகர்வோருக்கு ஏற்றதாக அமைகிறது" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சபாலா மில்லட்ஸின் இயக்குநர் சஹாரி செருகுரி பிராண்டின் லோகோ, படம் மற்றும் இ-காமர்ஸ் இணையதளமான www.sabalamillets.com ஆகியவற்றை வெளியிட்டார். மேலும் இந்த வெளியீட்டு நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு சபாலா மில்லட்ஸின் புதிய தயாரிப்பு பொருட்களை சுவைத்துபாற்க வழங்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details