தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயநாடு மக்களவை இடைத்தேர்தல்... 23ஆம் தேதி பிரியங்கா வேட்பு மனுத்தாக்கல்! - PRIYANKA GANDHI

கேரளமாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் 23ஆம் தேதி பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவருடன் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் செல்கிறார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 5:41 PM IST

புதுடெல்லி: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வரும் 23ஆம் தேதி அங்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவருடன் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் உடன் செல்கிறார்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு தொகுதியில் இருந்து அவர் ராஜினாமா செய்து விட்டார்.

இதையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வயநாடு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் 25ஆம் தேதி கடைசி தேதியாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் அக்டோபர் 30ஆம் தேதி ஆகும்.

இந்த நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஏற்கனவே இங்கு ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் காந்தி குடும்பத்தில் இருந்தே ஒருவரை மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதே பொறுத்தமாக இருக்கும் என்பதால் பிரியங்கா நிறுத்தப்பட்டிருக்கிறார். மேலும் வரும் 2026ஆம் ஆண்டு கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலும் பிரியங்கா வேட்பளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க :"வயநாட்டின் வலியை நேரில் பார்த்தேன்" - நாடாளுமன்றத்தில் உருகிய ராகுல் காந்தி!

இந்த நிலையில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே கேரளா காங்கிரஸ் கமிட்டியினர் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். ஆலப்புழா மக்களவை தொகுதி எம்பியும் மூத்த தலைவருமான கேசி வேணுகோபால்,ஆகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கேரளா பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி ஆகியோர் வயநாடு மக்களவைத் தொகுதியில் உள்ளூர் தலைவர்களைக் கொண்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி செயல்வீரர் கூட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு உட்பட்ட ஆந்தூர், திருவாம்பாடி பகுதிகளிலும் கூட்டம் நடத்தியுள்ளனர். கோழிகோடு முக்கம் பகுதியில் நேற்று நடந்த கூட்டத்தில் பெரும் அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்காவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஈடிவி பாரத்திடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும் கேரள மாநில பொறுப்பாளருமான மன்சூர் அலி கான், "காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய தொகுதிகளில் வயநாடுக்கு சிறப்பான இடம் உண்டு. வயநாடு தொகுதியின் குரலாக ஒலிக்க பிரியங்கா காந்தியை தேர்வு செய்ய தொகுதி மக்கள் ஆவலோடு உள்ளனர்,"என்றார்.

பிரியங்கா காந்திக்கு எதிராக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சத்யம் மொகேரி போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தமக்கு எதிராக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு எதிராக 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details