புது டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குடியரசு தின நிகழ்ச்சிக்கு பிறகு இம்மானுவேல் மேக்ரானுடன் செங்கடலில் ஏற்பட்ட பதட்டம் மற்றும் அதற்கான தீர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஏமனின் ஹூதி போராளிகள் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் முதல் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மோடி மற்றும் மேக்ரான் சர்வதேச கடல் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், செங்கடலில் சுதந்திரமாக செல்வதின் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி மற்றும் மேக்ரான் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது இந்த மோதலில் பொதுமக்கள் ஏற்பட்டுள்ள இழப்பை கண்டித்து, காசா பிராந்தியத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர் நிறுத்தம் உட்பட நிலைமைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பணையக் கைதிகளை விடுவிக்க காசா மற்றும் இஸ்ரேல் என இரு நாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.