பெங்களூரு: பெங்களூரு புறநகரான ஜிகானி பகுதியில் போலி பாஸ்போர்ட்டுடன் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர் 4 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவின் கூற்றுப்படி, பிடிபட்ட வெளிநாட்டினர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இவர்கள் ஓராண்டுக்கு முன்பு பெங்களூரு வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததற்கு உளவுத்துறையிடம், அமைச்சர் பரமேஸ்வரா கேள்வி எழுப்பினார். மேலும், பிடிபட்டவர்களிடம் போலி இந்திய கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜி.பரமேஸ்வரா மேலும் கூறுகையில், "எனக்குக் கிடைத்த தகவலின்படி, கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன் பெங்களூரு வந்தனர். 10 வருடங்களாக அவர்கள் தங்கியிருப்பது பற்றிய உறுதியான தகவல் எனக்குத் தெரியாது.