ETV Bharat / bharat

டெல்லியில் பாஜக அரசு பதவியேற்பு விழா எப்போது? வெளியான தகவல்! - DELHI NEW GOVT

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, வரும் 19 அல்லது 20-ம் தேதிகளில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2025, 7:50 PM IST

புதுடெல்லி: டெல்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் பிரப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற்றது. இதில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 3 முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. புதிய முதலமைச்சரவை தேர்வு செய்யும் பணியில் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை கைப்பற்ற முக்கிய பிரமுகர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஒருவரும், முதல்வர் பதவி அல்லது அமைச்சர் பதவிக்கான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படுபவரும், கட்சியின் தேசியசெயலாளர்களில் ஒருவருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். விரைவில் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கான பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

"புதிய அரசு பிப்ரவரி 19-20 ஆம் தேதிகளுக்குள் செயல்படத் தொடங்கும். பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் பிப்ரவரி 18-19 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகவும், புதிய அரசு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று நினைக்கிறேன்" என்றும் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார்.

மேலும், "டெல்லி முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை. எங்கள் கட்சியில் முதல்வர் அல்லது சட்டமன்றக் கட்சித் தலைவர் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்," என்று லட்சுமி நகர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அபய் வர்மா கூறினார்.

பூர்வாஞ்சலியைச் சேர்ந்த அபய் வர்மா, டெல்லி அரசில் முக்கிய பதவிக்கான போட்டியாளராக பேசப்படுகிறார். "நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம், இப்போது வளர்ச்சி, சுத்தமான நீர் வழங்கல் மற்றும் மக்களுக்கு சுத்தமான காற்று போன்ற பிரச்னைகளைத் தீர்ப்பது மற்றும் யமுனாவை மாசுபாட்டிலிருந்து விடுவிப்பது எப்படி? என்பது பற்றி யோசித்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

ஆம் ஆத்மி ஆட்சியில் தடுக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்திற்கு புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே ஒப்புதல் பெற்று செயல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர். புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுத்தமான குடிநீர், சுகாதாரத்தை உறுதிப்படுத்துவது மற்றும் காற்று மற்றும் யமுனை மாசுபாடுகளை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவை புதிய அரசின் 100 நாட்களுக்கான முன்னுரிமை பணிகளாக இருக்கும் என்று மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார். டெல்லியின் புதிய முதல்வர் 48 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 6-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சிங் பிஷ்ட் கூறினார்.

சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியின் பெயரை "சிவ் விஹார்" அல்லது "சிவ்புரி" என்று மாற்றுவதற்கான தனது திட்டத்தையும் முஸ்தபாபாத் எம்.எல்.ஏ.வான மோகன் சிங் பிஷ்ட் மீண்டும் வலியுறுத்தினார். "ஒரு சமூகத்தைச் சேர்ந்த (சிறுபான்மையினர்) சுமார் 42 சதவீத மக்கள் உள்ளனர், மறுபுறம் 58 சதவீத மக்கள் (இந்துக்கள்) உள்ளனர்... எனவே, பொதுமக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார். யமுனையின் தூய்மைப்படுத்துவதற்காக 28 இடங்களில் குழாய்கள் பதித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதை பாஜக அரசு உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.