தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் 'மைல்கல்' - மத்திய பட்ஜெட் குறித்து மோடி கருத்து! - BUDGET 2024

Narendra Modi on budget 2024: மத்திய பட்ஜெட் 2024-25, பழங்குடி சமூகம், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரம் அளிக்க வலுவான திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

By ANI

Published : Jul 23, 2024, 6:29 PM IST

பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

டெல்லி:நாடாளுமன்றத்தில் இன்று 2024-25 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024-25 குறித்து பிரதமர் மோடி பேசியதாவது, “இந்த பட்ஜெட் நாட்டிலுள்ள கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை செழிப்பின் பாதையில் அழைத்துச் செல்லும். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

ஏழைகள் என்ற பிரிவில் இருந்து உயர்ந்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேற நினைத்தும் இன்னும் 'மிடில் க்ளாசில்' நிலைபெறாதவர்களுக்கு இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் குறிப்பாக, நடுத்தர மக்களுக்கு புதிய பலத்தை தரும் என்றும் பழங்குடி சமூகம், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரம் அளிக்க வலுவான திட்டங்களை இந்த பட்ஜெட் கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

வரி மற்றும் டிடிஎஸ்: ''இந்த பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறையை தன்னிறைவடையச் செய்ய பல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வரி குறைப்பு குறித்தும் முடிவு எடுக்கப்பட்டு, டிடிஎஸ் விதிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள், நீர் மற்றும் மின் திட்டங்கள் மூலம் கிழக்கு பிராந்திய வளர்ச்சி விரைவுபடுத்தப்படும்'' என்று கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்: ''சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு இது புதிய முன்னேற்றப் பாதையை வழங்கும். கடன்களை எளிதாக்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி சூழலைக் கொண்டு செல்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் புதிதாக தொழில் தொடங்குவதற்கும் மற்றும் விண்வெளி பொருளாதாரத்திற்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும்'' என்றார்.

உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு: "பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இணைந்து இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவோம். நாட்டின் சிறு, குறு தொழில் துறை நடுத்தர வர்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த துறை ஏழைகளுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்குகிறது'' என்றார். மேலும், இந்த பட்ஜெட் பெண்களின் பொருளாதார பங்களிப்பை எளிதாக்கும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை வழங்கும் மைல்கல் என்று கூறினார்.

வேலைவாய்ப்பில் ஊக்கத் திட்டம்: இந்த திட்டம் தேசத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளது. இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். இத்திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு முதல் சம்பளத்தை அரசு வழங்கும். கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் பணிபுரிய முடியும்" என்று மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்த பட்ஜெட்டை தயார் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினரின் அயராத முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2024: துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்!

ABOUT THE AUTHOR

...view details