புதுடெல்லி: வக்ஃப் (திருத்தம்) மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வியாழக்கிழமை தனது அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தது. குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால், சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது நாடாளுமன்ற இல்ல அலுவலகத்தில் சந்தித்து அறிக்கையை வழங்கினார்.
ஆளும் பாஜக உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைக் கொண்ட அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு பெரும்பான்மை வாக்குகளால் நேற்று ஏற்றுக் கொண்டது. எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் புறக்கணிக்கப்பட்டதால், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் இது வக்ஃப் வாரியங்களை அழிக்கும் முயற்சி என்று குற்றம்சாட்டின. வக்ஃப் (திருத்தம்) மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு வரைவுச் சட்டம் குறித்த அறிக்கையை 15-11 பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொண்டது.