பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு அடுத்த பெல்லாரி, கௌல் பஜார் பகுதியை சேர்ந்த ஷபீர் என்ற நபரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஷபீர் அண்மையில் மேற்கொண்ட பயணங்களை பார்க்கையில், அவருக்கு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் கூறித்து தெரிந்து இருக்கலாம் என்றும் அதன் காரணமாக காவலில் எடுத்து விசாரித்து உள்ளதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதே பெல்லாரி கெளல் பஜார் பகுதியை சேர்ந்த தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்நியா மற்றும் துணி வியாபாரியான ஒருவரை தேசிய புலனாய்வு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலில் எடுக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும், குறிப்பிடத்தக்க வகையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நபருக்கு அதிகபட்சமாக தொடர்பு இருக்கலாம் என்றும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூருவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் திடீர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் கடையின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான உபாவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மர்ம நபர் குறித்த அடையாளங்களை வெளியிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக ஒருவரை தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :"தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை... மத்திய அரசு உத்தரவிட்டாலும்..."- சித்தராமையா!