புதுச்சேரி:புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் முத்துப்பாண்டி- விஜயலட்சுமி தம்ப தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் சனல்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் புதுச்சேரி கடற்கரை சாலை அருகே பொம்மை, பலூன் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் புதுச்சேரி கடற்கரைச் சாலை அருகே பொம்மை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பெற்றோரின் அருகில் குழந்தை சனல்யா விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் திடீரென அந்த குழந்தை மாயமானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் கடற்கரையில் பல இடங்களில் அலைந்து தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பெரியக்கடை காவல் நிலையத்தில் குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளதாகப் புகார் அளித்தனர்.